மண்வளம் காக்க வலியுறுத்தி கோவை பொள்ளாச்சியில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி 500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு..!

மண் வளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும், இது காலத்தின் கட்டாயம் மண் வளத்தை காப்பது அவசியமாகும். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


கோவை: ஈஷா யோக மையம் மண் காப்போம் இயக்கம் சார்பில் சத்குரு மண் வளத்தை காக்க வலியுறுத்தி உலகம் முழுவதும் 30-ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் லண்டனில் தொடங்கி இன்று இந்தியாவுக்குள் இன்று நுழையும், சத்குருவை வரவேற்கும் விதமாகவும், உலக அளவில் மண் தரம் குறைந்து வருவதால் மண்வளத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும், ஈசா யோகா மையம் மற்றும் பொள்ளாச்சிதடகள சங்கம் சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.



பொள்ளாச்சி பல்லடம் சாலை ராஜேஸ்வரி திடலில் தொடங்கிய மாரத்தான் போட்டியை நகரமன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள், பெரியவர்கள் என ஐந்து பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. ராஜேஸ்வரி திடலில் தொடங்கிய ஓட்டம் 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள PA பாலிடெக்னிக்கல்லூரியில் நிறைவடைந்தது.



இதில் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு ஓடினர்.வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

உலக அளவில் மண்தரம் குறைந்து கொண்டே வருகிறது. இதை உலகநாடுகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் வகையில் மண் வளத்தைமீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டும் இது காலத்தின் கட்டாயம் மண் வளத்தை காப்பது அவசியமாகும். இதற்கு அனைத்து தரப்பு மக்களும் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...