10-வயது சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய அலைக்கழிப்பதாக கூறி, பல்லடம் அரசு மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
திருப்பூர்: விபத்தில் பலியான சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தாமதம் ஆனதால் உறவினர்கள் பல்லடம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வேலப்பகவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், தர்ஷனா (10) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 21-ம் தேதி தனது மனைவி மற்றும் மகளுடன் கார்த்திகேயன் காரில் சென்னை சென்றுள்ளார். பெரம்பலூர் அருகே நின்று கொண்டிருந்த காரின் மீது கார்த்திகேயன் கார் மோதியதாக கூறப்படுகிறது. இதில் தர்ஷனா பலத்த காயமடைந்த நிலையில், கலைவாணிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.
இருவரும் பெரம்பலூர் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் கலைவாணி உடல்நலம் தேறினார். கடந்த ஒரு வார காலமாக தர்ஷனா சிகிச்சையில் இருந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் நேற்று தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து நேற்று தர்ஷனாவை ஆம்புலன்ஸ் மூலம் பல்லடம் அழைத்து வந்துள்ளனர். பல்லடம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு வந்த நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்ய விபத்து நடந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து உரிய ஆவணங்கள் வாங்கி வர சொன்னதாக கூறப்படுகிறது.
உறவினர்கள் ஆவணங்கள் கொண்டு வந்த நிலையில், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு தர்ஷனாவின் உடலை கொண்டு செல்ல மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தர்ஷனாவின் உறவினர்கள் மருத்துவர்கள் உடற்கூறாய்வு செய்ய கால தாமதம் செய்வதாக கூறி பல்லடம் அரசு மருத்துவமனையை 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் உறவினர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லவும், அங்கு உடற்கூறாய்வு செய்து தரப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.