கோவை வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

மேலும், நீண்ட காலமாக மக்கள் பயன்பாட்டுக்கு வராத படகு இல்லம் தாவரவியல் பூங்காவை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் இந்த ஆண்டு கோடை விழா நடக்காததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியானது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கே எழில் கொஞ்சும் பச்சை பசேலென்ற தேயிலைத் தோட்டங்கள் நிறைந்த பகுதி யானை சிறுத்தை புலி காட்டெருமை மான் போன்ற வனவிலங்குகள் அதிகம் வாழக்கூடிய பகுதியாகும்.

சோலையாறு அணை, சின்னக் கல்லாறு அணை 12-கிலோமீட்டர் சுரங்கப்பாதையில் தண்ணீர் வரும் வெள்ளமலை டனல், கூழாங்கல் ஆறு மலை உச்சியில் இருந்து பார்த்தால் கண்ணுக்கு தெரியும் வரை பார்க்க கூடிய நீர்வீழ்ச்சி காடு நல்லமுடி பூஞ்சோலை ஆங்காங்கே தேயிலைத் தோட்டத்தில் சுற்றி திரியும் காட்டு எருமைகள் இவற்றை பார்க்க வரும் சுற்றுலா பயணிகள், வால்பாறை பகுதியில் பிரதான தொழிலாக தேயிலை பறிக்கும் தொழிலையே நம்பி மக்கள் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வனவிலங்கு தொந்தரவு காரணத்தினாலும் கூலி குறைவு காரணமாகவும், வால்பாறை பகுதியில் இருந்து வெளியூருக்கு ஏராளமான மக்கள் குடி பெயர்ந்து விட்டார்கள் வால்பாறை பகுதியில் தற்போது சுமார் 60 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

வால்பாறையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பல சங்கங்கள் வால்பாறை பகுதியை சுற்றுலா மையமாக்க பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் கடந்த ஆட்சியில் பல கோடி மதிப்பில் படகு இல்லம் மற்றும் தாவரவியல் பூங்கா பணி துவங்கி நிறைவு செய்யப்பட்டது.

அதை அப்போது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்த நிலையில் ஆட்சி மாற்றத்தால் மேலும் பணியை கிடப்பில் போட்டு தற்போது வரை தாவரவியல் பூங்கா படகு இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ள நிலையில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.



தமிழகத்தில் மே மாதங்களில் ஊட்டி கொடைக்கானல் ஏற்காடு போன்ற மலைப் பகுதிகளில் அரசு கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. வால்பாறை பகுதிகளிலும் பல ஆண்டுகளாக கோடை விழா மே மாதங்களில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது பல வருடங்களாக கோடை விழா நடத்தப்படாமல் இருப்பதாலும் பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் வால்பாறைக்கு வந்து ஏமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.

அதே போன்று வால்பாறையில் வியாபாரிகள் வால்பாறையில் பொது மக்கள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு வால்பாறை பகுதியில் கிடப்பில் இருக்கும் தாவரவியல் பூங்கா படகு இல்லத்தையும் தமிழக அரசு பணிகளை முடித்து பொதுமக்கள் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வியாபாரி சங்கத்தின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



மேலும் படகு இல்லத்தில் பல லட்சம் மதிப்பில் படகுகள் வாங்கியும் படகுகள் உடைந்து பயனற்றதாக தற்போது வரை இருப்பதால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் சென்று வருகின்றனர்.

வால்பாறை பகுதியில் சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாததால் வெறுமனே ஏமாற்றத்துடன் செல்கின்றனர். தமிழக அரசு இதற்கு நடவடிக்கை எடுத்து படகு இல்லம் தாவரவியல் பூங்கா திறக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...