கோவை பொள்ளாச்சியில் கம்யூனிஸ்ட், விசிக சார்பில் - பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று, பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: விண்ணை முட்டும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பொள்ளாச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தற்போது நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், பொள்ளாச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.ஆர்ப்பாட்டத்தில், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...