பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகி வி.எம் ராஜன் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
கோவை: தமிழக பாஜக பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏ.பி முருகானந்தம் பிறந்த நாளை முன்னிட்டு, கோவை மாவட்ட நிர்வாகி வி.எம் ராஜன் சார்பில், கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கான சோப்பு, உடைகள், விளையாட்டுப் பொருட்கள் அடங்கிய பெட்டகங்களும்வழங்கப்பட்டன. இன்று கோவை அரசு மருத்துவமனையில் பிறந்த 5 குழந்தைகளுக்குப் பரிசு பெட்டகம் மற்றும் தங்க மோதிரத்தை வி எம் ராஜன் வழங்கினார்.
இதுகுறித்து நிர்வாகிகள் கூறும் போது:-
மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், தேசிய துணைத் தலைவராக பதவி வகித்து பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றி பா.ஜ.க வின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
மேலும் பா.ஜ.க வின் உண்மை தொண்டராகவும்,சிறந்த தலைவராக விளங்குகிறார். எனவே அவரது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் ஏழை குழந்தைகள் பயன்பெறும் வகையில் தங்க மோதிரம் பரிசாக வழங்கியுள்ளதாகவும், குழந்தைக்குத் தேவையான பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலை, கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் முரளி, உக்கடம் ஜோதி, சார்லஸ் சிங், சந்தோஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.