கோவையில் வாட்ஸ் அப் வழியாக ஹைடெக் விபசாரம்.. பொள்ளாச்சியில் சிக்கிய ஏஜென்ட்..!

வீட்டில் இருந்த அறைகள் மற்றும் அவரது செல்போனை சோதனை செய்து பார்த்ததில், பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படம் அனுப்பி விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.


கோவை: பொள்ளாச்சியில், ஆன்லைன் வாயிலாக புகைப்படம் அனுப்பிவிபசார தொழில் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி அருகே ஆச்சிபட்டி ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்தனியாக இருக்கும் ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக தாலுக்கா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அங்கு போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு இருந்த நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் ஆழியாறு பகுதியை சேர்ந்த செல்லபாண்டியன்(38) என்பது தெரியவந்தது.

பின்னர், வீட்டில் இருந்த அறைகள் மற்றும் அவரது செல்போனை சோதனை செய்து பார்த்ததில், அதில் பல்வேறு நபர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் பெண்களின் புகைப்படம் அனுப்பி விபச்சாரம் செய்து வந்தது தெரியவந்தது.

மேலும், வீட்டில் இருந்த அறையில் ஒரு பெண் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, செல்ல பாண்டியனை கைது செய்த தாலுகா போலீசார், விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணை மீட்டு கோவை கூர்நோக்கு இல்லத்தில் ஒப்படைத்தனர்.

கைது செய்யப்பட்ட செல்ல பாண்டியன் ஏற்கனவே விபசார வழக்கில் பொள்ளாச்சி கிழக்கு போலீசாரால் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...