கோவை அவினாசி-அத்திக்கடவு திட்ட பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் இரும்பு திருட்டு - 5 பேர் கைது...!

திருடப்பட்ட 1.5 டன் இரும்பு பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: அவினாசி-அத்திக்கடவு திட்ட பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் இரும்பு பொருட்கள் திருடு போயுள்ளதாக அன்னூர் போலீசில்புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவினாசி-அத்திக்கடவு திட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அன்னூரை அடுத்துள்ள குன்னத்தூராம்பாளையம் பகுதியில் 6 வது நீரேற்று நிலையம் அமைக்கும் பணி ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பகுதியை சேர்ந்த சிபியரசன்(29) என்பவரது பொறுப்பில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அவர் நேற்று தனது பொறுப்பில் உள்ள அவினாசி-அத்திக்கடவு திட்ட பணிகளுக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1.5 டன் இரும்பு பொருட்கள் திருடு போயுள்ளதாக அன்னூர் போலீசில்புகாரளித்துள்ளார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இரும்பு பொருட்களை திருடிய திருடர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அன்னூர் போலீசார் தென்னம்பாளையம் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது,அவ்வழியாக வந்த 5 பேரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் அவர்கள் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன்(25),பிரசாந்த்(24),நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த கெளதம்(24),சேலம் மாவட்டம் வாழப்பாடியை சேர்ந்த நவீன்(25),பூபதி(25) என்பதும், குன்னத்தூராம்பாளையம் அவினாசி-அத்திக்கடவு திட்ட இரும்பு பொருட்களை திருடியதும் தெரியவந்தது.



மேலும், இதில் பிரசாந்த் என்பவர் அவினாசி-அத்திக்கடவு திட்டத்தின் குன்னத்தூராம்பாளையம் நீரேற்று நிலையத்தின் காவலாளியாக பணிபுரிந்ததும், மற்றவர்கள்அவரது நண்பர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்களிடம் இருந்து திருடப்பட்ட 1.5 டன் இரும்பு பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...