கோவை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட 3-விமானங்கள்..!

கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 3-விமானங்கள் கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.


கோவை: கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை எதிரொலியாக கோழிக்கோடு விமான நிலையத்திற்கு வந்த 3-விமானங்கள் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

கேரளா மலை ஓர மாவட்டங்களான வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலைகேரளா மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்திற்கு சார்ஜாவில் இருந்து வந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கோவை விமான நிலையம் 6-வது ஓடு தளத்தில் தரையிறக்கப்பட்டது.

அதே நேரத்தில் அபுதாபியில் இருந்து வந்த விமானமும் கோவை விமான நிலையம் 4-வது ஓடு தளத்தில்தரையிறக்கப்பட்டது.பின்னர் காலை 7-மணியளவில் கோழிக்கோடு வந்த சார்ஜா விமானமும் கோவை விமான நிலையத்தில் உள்ள 9-வது ஓடு தளத்தில் தரையிறக்கப்பட்டது.

நீண்ட நேரத்திற்குப் பின் சீரான வானிலை மாற்றம் ஏற்பட்ட பிறகு மீண்டும், கோவையிலிருந்து கோழிக்கோடு விமான நிலையத்திற்கு 3-விமானங்களும் புறப்பட்டுச் சென்றது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...