உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர்: பல்லடம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் டயர் வெடித்ததில் லோடுமேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஓட்டுனர் காயங்களுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரையிலிருந்து விறகு பாரம் ஏற்றி கொண்டு பல்லடத்திற்கு வந்த லாரியை அபூபக்கர் என்பவர் ஓட்டி வந்தார். பல்லடம்பனப்பாளயத்தை சேர்ந்த லோடுமேன் வீராசாமி என்பவரை அழைத்துக் கொண்டு விறகுகளை இறக்க சென்று கொண்டிருந்தனர்.
உடுமலை சாலையில் லாரியை நிறுத்தி விட்டு டீ குடிக்க சென்ற போது சக்கரங்களைப் பரிசோதித்தனர். லாரியின் பின்புற சக்கரத்தை லோடுமேன் வீராசாமி சோதனை செய்த போது திடீரென லாரியின் டயர் வெடித்தது.

இதில் லோடுமேன் வீராசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுனர் அபுபக்கர் காயமடைந்தார். இதனைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அபுபக்கரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

வீராசாமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.