இன்று முதல் 31-ஆம் தேதி வரை பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள 4-வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.
கோவை: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள 4-வனச்சரகங்களில் கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் (உலாந்தி) டாப்சிலிப், மானாம்பள்ளி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன.
இங்கு யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான்கள், வரையாடு, சிங்கவால் குரங்கு போன்ற அரிய வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆண்டுதோறும் கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்துக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்த தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, இன்று முதல் 31-ஆம் தேதி வரை பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள 4-வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.
பயிற்சி அளிக்கப்பட்ட வனத்துறை ஊழியர்களை தனித்தனி குழுக்களாக பிரிந்து, இன்று முதல் வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் தொடங்கியது.

இந்த கணக்கெடுப்பில் வனவிலங்குகளின் காலடித்தடங்கள், மரங்களில் ஏற்பட்டுள்ள நகக்கீறல்கள், எச்சம் உள்ளிட்டவர்களை ஜிபிஎஸ் கருவி மற்றும்செயலி மூலம் பதிவு செய்யப்பட்டது.
வனவிலங்கு கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
இந்த பணிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் வனத்துறை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.