இப்படி இருந்தா...எப்படிங்க? கோவை அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆட்சியரிடம் மனு..!

கோவை அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.



கோவை: கோவை அரசு கலைக் கல்லூரியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.



கோவை அரசு கலைக் கல்லூரியில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் கல்லூரி மாணவர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனர்.

மனு அளிக்க கல்லூரியிலிருந்து திரளாக வந்த மாணவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பிய படி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தனர்.



"கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களின் நலன் மற்றும் கல்லூரி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் யுஜிசி போன்ற பலவற்றில் முறைகேடு நடந்து வருவதாகவும், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது விசாரணை நடத்துவதற்கு கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும் புவியியல் துறையில் உதவிப் பேராசிரியர் பாத்திமாகடந்த ஆறு மாதங்களாக பாடங்கள் எதுவும் எடுக்காமல் இருந்து வரும் நிலையில் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

தங்களது கோரிக்கைகளுக்கு மாவட்ட ஆட்சியர் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.





Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...