கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்தில் கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நாளை தொடக்கம்..!

நாளை 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள 4-வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்தில் நாளை கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில், (உலாந்தி) டாப்சிலிப், மானாம்பள்ளி, பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய 4 வனச்சரகங்கள் உள்ளன.

இங்கு யானை, சிறுத்தை, புலி, புள்ளிமான்கள், வரையாடு, சிங்கவால் குரங்கு போன்ற அரிய வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், ஆண்டுதோறும் கோடைக்காலம் மற்றும் குளிர்காலத்துக்கு வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டிற்கான கோடைக்கால வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் நடத்த தேசிய புலிகள் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து, நாளை 24-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள 4-வனச்சரகங்களிலும் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளது.

முன்னதாக, இன்று அட்டகட்டி வனத்துறை பயிற்சி முகாமில் வனத்துறை ஊழியர்களுக்குக் கணக்கெடுப்பு பணிகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன் பின்னர், நாளை முதல் தனித்தனி குழுக்களாக பிரிந்து, வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் 8-நாட்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இறுதி நாளன்று சேகரிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனரிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...