ஜாதகம் சரியில்லை.. தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்து ஏமாற்றிய உதவி ஆய்வாளர் மீது கோவையில் மனைவி புகார் மனு..!

தோஷம் கழிப்பதற்காக தன்னை திருமணம் செய்து கொண்டு ஆபாச படம் எடுத்து மிரட்டும் உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.


கோவை: ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் கழிப்பதற்காக திருமணம் செய்து கொண்டு, முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்துமிரட்டி வேறு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும்உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள உறுமங்களம் பகுதியை சேர்ந்தவர் இளவரசி. இவருக்கும் முதுமொத்தன்மொழி கிராமத்தை சேர்ந்த, காவல் துறையில்உதவி ஆய்வாளராக பணிபுரியும்,ஆறுமுக நயினாருக்கும்கடந்தாண்டு ஜீன் 13 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.



வரதட்சணையாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமும், 20 பவுன் நகையும், ஆறுமுக நயினாருக்கு 5 பவுன் நகையும் போட்டுள்ளனர். இதனையடுத்து இளவரசியின் விருப்பத்திற்கு மாறாக, மாத்திரைகளை கொடுத்து உடலுறவு கொண்டுள்ளார்.

மேலும், அதை வீடியோ எடுத்து மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது. திருமணம் முடிந்து14 நாட்கள் மட்டுமே தன்னுடன் இருந்துவிட்டு வேலை நிமித்தமாக கோவைக்கு வந்துவிட்டார். இதனையடுத்து லதா என்ற பெண் இளவரசியிடம் செல்போனில்உனது கணவரின் பெண் தோழி எனக்கூறி ஆபாசமாக பேசியுள்ளார்.

அதே எண்ணிலிருந்து ஆறுமுக நயினாரும், சந்தர்ப்ப சூழலால், உன்னைதிருமணம் செய்ய வேண்டியதாகிவிட்டது. நீ ரொம்ப ஆசைப்படாதே, முடிந்தால் எங்கள் வீட்டில் இரு இல்லையென்றால் உன் வீட்டிற்கு போய்விடு என மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து, இளவரசியின் தாய் ஆறுமுக நயினாரின் பெற்றோர்களிடம் பேசியுள்ளனர். அவர்களும் என் மகன் எஸ் பி வரைக்கும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. உங்க தகுதி என்ன என் தகுதி என கேட்டு அவமானப்படுத்தியுள்ளனர்.

ஜாதகம் சரியில்லை என்பதால் தோஷம் கழிப்பதற்காகதன்னை திருமணம் செய்துகொண்டு, முதலிரவில் நடந்ததை வீடியோ எடுத்துவேறு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தும்கணவர் ஆறுமுக நயினார்மற்றும்அவருக்கு உதவியாக இருக்கும் உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்ட பெண் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.



இவர் தற்போது கோவை தடாகம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...