போர்க்கால அடிப்படையில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கொப்பரையை கொள்முதல் செய்ய வேண்டும் மற்றும் கொப்பரை கொள்முதல் செய்து ஒரு வாரத்திற்குள் விவசாயிகளுக்கான தொகையையும் கொடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.
கோவை: கொப்பரை தேங்காய் கொள்முதல் சம்பந்தமாக பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்குமாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக கொப்பரை தேங்காய் கிலோவிற்கு 110 ரூபாய் முதல் 140 ரூபாய் வரை விற்று வந்தது, தென்னை விவசாயிகள் நலன் பலன் பெற்று வந்தார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக தேங்காய் கொப்பரை விலை 80 ரூபாயாக குறைந்து விட்டது. அதே நேரத்தில் பொருள் விலை கூலி மற்ற செலவுகள் பன்மடங்கு உயர்ந்து விட்டது. இதனால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இந்த சூழலில் அரசாங்கம் கொப்பரை கொள்முதல் அறிவித்து சுமார் 6 மாதங்களாகியும் நிலைமை சரியாகவில்லை. அறிவித்தபோது 90 ரூபாயாக இருந்த விலை தற்பொழுது மேலும் 11 ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு மிக குறைவாக மந்தமான கொப்பரை கொள்முதல் காரணம்.
இதனால் அனைத்து விவசாயிகள் இடத்திலும் இருப்பு அதிகரித்துள்ளது. ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ வரை ஒரு ஆண்டுக்கு கிடைக்கும், அதில் ஒரு ஏக்கருக்கு குறைந்தது 750 கிலோ கொப்பரை கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும், இதே விலை வீழ்ச்சி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு டாக்டர் கலைஞர் முதல்வராக இருக்கும் பொழுது கலைஞரின் உத்தரவின் பேரிலே அனைத்தும் மார்க்கெட் கமிட்டி மற்றும் கூட்டுறவு சங்கங்களிலும் கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
கோவை மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கொள்முதல் நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது. இதனால் 60 நாட்களில் கிலோவுக்கு 15 ரூபாய் விலை உயர்வு பெற்று வீழ்ச்சியிலிருந்து விவசாயிகள் நலம் பெற்றனர். ஆனால் தற்போது கோவை மாவட்டத்தில் 5-க்கும் குறைவான கொள்முதல் நிலையங்கள் உள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிப்பு அடைகிறார்கள்.
தற்போது செயல்பட்டு கொண்டிருக்கும் கொள்முதல் நிலையங்களில் ஒரு நாளைக்கு 100 லிருந்து 200 மூட்டை வரைதான் கொள்முதல் செய்கின்றனர். இது விவசாயிகளுக்கு எரிச்சலூட்டும் வகையில் உள்ளது. ஏனென்றால் ஒரு நாளைக்கு கொள்முதல் நிலையங்களில் 2 ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்தால் தான் நமது மாவட்ட விவசாயிகள் நலன் பெற முடியும், ஆதலால் போர்க்கால அடிப்படையில் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் கொப்பரையை கொள்முதல் வேண்டும் மற்றும் கொப்பரை கொள்முதல் செய்து ஒருவாரத்திற்குள் விவசாயிகளுக்கான தொகையையும் கொடுக்க வேண்டும்.
மேலும், கனிமவள முறைகேடு சம்பந்தமாக மதுக்கரை கிணத்துக்கடவு பகுதியில் அனுமதி இல்லாமலும் அனுமதி காலாவதி ஆகியும், பல கல்குவாரிகள் வெளிப்படையாக அதிகாரிகளின் உதவியுடன் செயல்பட்டு வருகிறது.
இதை தாங்கள் உடனடியாக தடுத்து நிறுத்த உத்தரவிட வேண்டும். கிராவல் மண் எடுக்க அரசிடம் இருந்து அனுமதி பெற்ற குவாரிகளுக்கு அரசின் PERMIT PASS வழங்காமல் S.R.GROUP(PVT) மூலமாக மட்டுமே PERMIT PASS வழங்கப்படுகிறது.
இதைப் பயன்படுத்தி S.R.GROUP(PVT) 1 யூனிட் மண்ணுக்கு ரூபாய் 400 வசூலித்து வருகிறார்கள். காவல் துறையின் உதவியோடு MINE DEPARTMENT உதவியுடனும் இந்த வசூல் வேட்டை நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்தும் கிராவல் மண் விலை ஒரு ரூபாய் 400 அதிகரித்துள்ளது.
குவாரி கற்கள் கேரளாவிற்கு எடுத்துச் செல்ல தேவையான TRASIT PASS அரசின் அனுமதி பெற்று STOCK YARD வைத்திருப்பவர்களுக்கு வழங்காமல் V.P & CO என்ற கம்பெனி மூலம் மட்டும் வழங்கப்படுகிறது. V.P & CO அனைத்து மாநில CHECKPOST அருகில் பிரைவேட் செக்போஸ்ட் அமைத்து ஒரு யூனிட்டிற்கு ரூ 300 வசூலித்து TRANSIT PASS மற்றும் ரசீது கொடுக்கிறார்கள்.
இந்த ரசீதை காட்டினால் மட்டுமே எல்லையோர செக்போஸ்டில் அனுமதிக்கிறார்கள் தமிழக கனிம வளம் சுரண்டி முறைகேடாக கேரளாவிற்கு விற்கப்படுகிறது. இது மிகவும் அபாயகரமான கொள்ளை இந்த சம்பவம் ஒரு PARALLEL அரசாங்கமே நடைபெறுகிறது. இதற்கு உடந்தையாக உள்ள அரசு அதிகாரிகளையும் மற்றும் கொள்ளையர்களையும் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்ய கோரி பாரதிய ஜனதா கட்சி கோவை தெற்கு மாவட்ட தலைவர் கே.வசந்தராஜன் தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.