திருப்பூரில் அரசு பள்ளியில் பயிலும் சகோதரிகள் இலங்கை மக்களுக்கு தங்களது சேமிப்பு பணத்தை வழங்க முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர்: இலங்கை மக்களுக்கு தங்களதுசேமிப்பு பணத்தை வழங்க முதல்வரை சந்திக்க அனுமதி கேட்டு அரசு பள்ளியில் பயிலும் சகோதரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
திருப்பூர் கணபதிபாளையம் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் பிரேமா மற்றும் அவரது சகோதரி ஆறாம் வகுப்பு பயிலும் உமா ஆகியோர் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில், தங்களது உண்டியல் சேமிப்பு பணம் 3-ஆயிரம் ரூபாயை இலங்கை மக்களுக்கு வழங்கும் வகையில் முதலமைச்சரை சந்தித்து காசோலையை வழங்க அனுமதி கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த அவர்கள் மஞ்சப்பை விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகளுடன் வந்திருந்தனர்.