விளாங்குறிச்சி ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலைகள் தரமற்ற நிலையில் இருப்பதாக மாநகராட்சி ஆணையரை சந்தித்து புகார் தெரிவிக்க அதிமுக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர்.
கோவை: விளாங்குறிச்சி ரோட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளை அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயராம் மற்றும் அருண்குமார் ஆகியோர் இன்று ஆய்வு செய்தனர்.

ஆய்வு குறித்து அவர்கள் கூறியதாவது: விளாங்குறிச்சி ரோட்டில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சாலை பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு நாட்கள் பெய்த மழைக்கே புதிதாக அமைக்கப்பட்ட ரோடு தாக்குப் பிடிக்கவில்லை. பல இடங்களில் குண்டும் குழியுமாக மாறியுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனரை நேரில் சந்தித்து புகார் செய்ய முடிவு செய்துள்ளோம். பல கோடி ரூபாய் செலவில் புதிய தார்சாலை அமைக்கும் பணி சீரான முறையில் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே எதிர்வரும் ஆண்டுகளுக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். ஆய்வின் போது பகுதி கழக செயலாளர்கள், வார்டு செயலாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.