கோவையில் தமிழ் பாரம்பரிய கலையான வளரி கலை குறித்த நடுவர்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி முகாம்..!

தமிழ் பாரம்பரிய கலையான வளரி கலை குறித்த நடுவர்களுக்கான தேசிய அளவிலான பயிற்சி முகாம் இந்திய வளரி விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக கோவையில் நடைபெற்றது.


கோவை: கோவையில் தமிழ் பாரம்பரிய கலையான வளரி கலை குறித்த நடுவர்களுக்கானதேசிய அளவிலான பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழர்கள் போரில் எதிரிகளை வீழ்த்த சிலம்பம், வாள் சண்டை, வளரி உள்ளிட்ட தற்காப்பு கலைகளை பயன்படுத்தினர். தற்போது வளரி உள்ளிட்ட போர்க்கலைகள் அழிந்து வருகின்றன.

இந்நிலையில் வளரி கலையை விளையாட்டாக ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் வளரி கலை விளையாட்டாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விளையாட்டில் நடுவர்களாக செயல்படுவதற்கான பயிற்சி முகாம் கோவை கணபதி கிருஷ்ண கவுடர் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது.

இந்திய வளரி விளையாட்டு கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற இதில், குஜராத், பீகார், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தில் திருச்சி, கோவை, மதுரை, தஞ்சை என பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வளரி கலை விளையாட்டு பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் கலந்து கொண்டனர்.



இந்திய வளரி விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் முகம்மது சிராஜ் அன்சாரி அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் தியாகு நாகராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர் கலை நண்மணி நீலமேகம், தொழில்நுட்ப இயக்குனர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயிற்சி முகாமில், வளரி விளையாட்டு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், மற்றும் அது குறித்த பயிற்சி வழங்கப்பட்டது. இதுகுறித்து கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், பாரம்பரிய தமிழர் கலையான வளரியை அழிவின் விளிம்பில் இருந்து மீட்டு, அவற்றை இன்றைய இளைய தலைமுறையினருக்கு கற்றுக்கொடுத்து, தமிழர்களின் பழமையான கலைகளை இன்றைய இளம் தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக இது போன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர், கிருஷ்ணமூர்த்தி, ஜுவன் சிரில் மற்றும் பயிற்சியாளர் சிவமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...