கோவை வால்பாறையில் தொடரும் 'மழை'.. மேக மூட்டத்தில் வாகனத்தை இயக்க சிரமம்..!

வால்பாறையில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பட்ட பகலில் மேக மூட்டத்தில் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.


கோவை: வால்பாறையில் பெய்து வரும் மழையால் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் வாகனங்கள் இயக்க முடியாமல் பட்ட பகலில் மேக மூட்டத்தில் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் மேக மூட்டங்கள் அதிகமாக காணப்படுவதால்வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கவர்கள், ஊமையாண்டிமுடக்கு, வட்டர்பால்ஷ், எஸ்டேட் பகுதி வரை அதிக மேக மூட்டம் காணப்படுவதால்பட்டப்பகலில் வாகனங்களில் ஒளி விளக்கு எரிய விட்டு வாகனத்தை இயக்குகின்றனர்.

அதிக மழை பெய்வதால் சாலை தெரியாமல் உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறையினர் கொண்டை ஊசி வளைவுகளில் எதிரே வரும் வாகனங்களைத் தெரிவதற்குக் கண்ணாடி பொருத்தப்பட்டு உள்ளது.



அது பல இடங்களில்சட்டவிரோதமாக உடைக்கப்பட்டும்அதிக கனமழையால் கண்ணாடிஉடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களைப்பாதுகாப்பாக ஓட்டி வரமுடியாத சூழ்நிலை ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல்விபத்து ஏற்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைத்துறையினர் வாட்டர்ஃபால் பகுதியிலிருந்து ரொட்டிக்கடைபகுதி வரை சாலைகளில் இருபுறமும் ஒளிரும் விளக்குகளையும் வளைவுகளில் எச்சரிக்கை பலகைகளையும், எச்சரிக்கை ஒளி விளக்குகளையும், அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...