கோவையில் சேவைகளை விரிவுபடுத்தும் விஸ்தரா: டெல்லி - கோவை விமான சேவை தொடங்கியது!

மும்பை-கோவை மற்றும் பெங்களூரு-கோவை வழித்தடங்களில் முறையே மே 27 மற்றும் ஜூன் 03 ஆகிய தேதிகளில் நேரடி சேவைகளை விஸ்தரா நிறுவனம் தொடங்குகிறது.



கோவை: இந்தியாவின் மிகச்சிறந்த சேவை நிறுவனம், டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூட்டு நிறுவனமான விஸ்தரா, டெல்லி மற்றும் கோயம்புத்தூர் இடையே தினசரி நேரடி விமான சேவையை இன்று தொடங்கியது.

2022 மே 27 முதல் மும்பை-கோயம்புத்தூர் வழித்தடத்தில் தினசரி நேரடி சேவையையும் தொடங்குகிறது. ஜூன் 03, 2022 முதல் பெங்களூரு - கோவை வழித்தடத்தில் தினசரி விமான சேவையை இரு மடங்காகிறது.

இது குறித்து விஸ்தராவின் தலைமை நிர்வாக அதிகாரி வினோத் கண்ணன், கூறியிருப்பதாவது, “மூன்று மெட்ரோ நகரங்களில் இருந்து கோயம்புத்தூருக்கு தினசரி நேரடி விமானங்களை பயணிகள் வசதிக்கேற்ப புறப்பாடு மற்றும் வருகை நேரத்தில் தொடங்குவது, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிக இணைப்புகளை வழங்குவதற்கும், எங்கள் உள்நாட்டு விமான சேவையை வலுவாக்குவதற்குமான ஒரு முக்கியமான படியாகும். கோயம்புத்தூர் ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாக மட்டுமல்லாமல் வர்த்தகத்திற்கான முக்கிய மையமாக உருவெடுத்துள்ளதால், பயணிகள் அதிக அளவில் பல நோக்கத்திற்காக பயணிக்கும் நகரமாக இது உள்ளது. மேலும் இந்த வழித்தடங்களில் எங்களது சிறந்த சேவைகளை அவர்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது.

20 மே 2022 முதல் (இன்று முதல்) டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் விமானங்கள்:

பிரிவுவிமான எண்.செயல்படும் நாட்கள்புறப்பாடுவருகை
டெல்லி – கோயம்புத்தூர் –டெல்லி(20 மே 2022 முதல்)
டெல்லி- கோயம்புத்தூர்யூகே 0533தினசரி11:45 மணி14:40 மணி
கோயம்புத்தூர்-டெல்லியூகே 0534தினசரி15:15 மணி18:20 மணி
மும்பை– கோயம்புத்தூர்– மும்பை(27 மே 2022 முதல்)
மும்பை-கோயம்புத்தூர்யூகே 0521தினசரி11:10 மணி12:55 மணி
கோயம்புத்தூர்-மும்பையூகே 0522தினசரி13:30 மணி15:20 மணி
பெங்களூரு– கோயம்புத்தூர்– பெங்களூரு(03 ஜூன் 2022 முதல்)
பெங்களூரு - கோயம்புத்தூர்யூகே 0511தினசரி07:00 மணி07:55 மணி
கோயம்புத்தூர்- பெங்களூருயூகே 0512தினசரி08:30 மணி09:30 மணி
பெங்களூரு - கோயம்புத்தூர்யூகே 0513தினசரி19:25 மணி20:20 மணி
கோயம்புத்தூர்- பெங்களூருயூகே 0514தினசரி20:55 மணி21:45 மணி


ஸ்கைட்ராக்ஸ் மற்றும் டிரிப் அட்வைசரில் விஸ்தாரா இந்தியாவின் மிக உயர்ந்த தரமதிப்பீடு பெற்ற விமான நிறுவனமாகும். மேலும் இது கேபின் தூய்மை மற்றும் பாதுகாப்புத் தரங்களுக்காகப் பாராட்டப்படுவதற்கும் மேலாக, விமான சேவைகளுக்கு ‘சிறந்த விமான நிறுவனம்’ என்ற பல விருதுகளை வென்றுள்ளது. செயல்பாடுகளைத் தொடங்கி ஏழு ஆண்டுகளில் குறுகிய காலத்தில், விஸ்தாரா இந்திய விமானத் துறையில் செயல்பாடுகள் மற்றும் சேவை தரங்களை உயர்த்தி நாட்டின் விருப்பமான விமான நிறுவனமாக மாறியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான புதுமை சிந்தனை நிகழ்ச்சி

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் DST-FIST திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்களுக்கான இரண்டு நாள் புதுமை சிந்தனை நிகழ்...

கிணத்துக்கடவு கொலை வழக்கில் 16 வயது சிறுவன் உட்பட இருவர் கைது

கிணத்துக்கடவு அருகே கூலித் தொழிலாளி அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்ஸ்டாகிராமில் வீடியோ மற்றும் செல்பி பதிவிட்டதாக...

கலைஞர் கருணாநிதி 8வது நினைவு தினம்: துடியலூரில் அமைதிப் பேரணி

கோவை வடக்கு மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் கலைஞர் கருணாநிதியின் 8வது நினைவு தினத்தை ஒட்டி துடியலூரில் 500க்கும் மேற...

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை பெரிய தடாகம் ஸ்ரீ லலிதாம்பிகை கோவிலில் ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீ காமேஸ்வரர் திவ்ய திருக்கல்யாண மகோத்ஸவம் ஜகதாத்மானந்தா...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு: திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 43.87 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...