படம் வெளியானதைத் தொடர்ந்து கோவை மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.
கோவை: உதயநிதி ஸ்டாலின் நடித்த, நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதைக் கொண்டாடும் விதமாக கோவையில் அவரது ரசிகர், ரசிகைகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி திரையரங்கம் முன்பாக நடனம் ஆடி கொண்டாடினர்.
ரெட் ஜெயண்ட் மற்றும் ஜீ ஸ்டுடியோ தயாரிப்பில், இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், திரைப்பட நடிகரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமானஉதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையேதிரையரங்குகளில் இன்று வெளியானது.
கோவை ரயில் நிலையம் சாந்தி திரையரங்கில் படம் வெளியானதைத் தொடர்ந்து கோவை மாவட்டஉதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ரசிகர்கள் கொண்டாடினர்.
முன்னதாக கோவை வ.ஊ.சி.மைதான வளாகத்தில் மேள தாளங்களுடன் இருசக்கர வாகனத்தில் ரசிகர்கள் ஊர்வலமாகபடம் வெளியாகிய சாந்தி திரையரங்கிற்கு வந்தனர்.
தொடர்ந்து ரசிகைகள் தங்களது அபிமான நடிகர் நடித்து படம் வெளியானதைக் கொண்டாடும் விதமாக நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.