தமிழ் ஈழ இனப்படுகொலைக்கான 13-ம் ஆண்டு நினைவேந்தல்: கோவையில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பாக நினைவு நாள்..!

தமிழ் ஈழ இனப்படுகொலையின் 13-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கோவையில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பாக நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



கோவை:கோவையில் அனைத்து ஜனநாயக அமைப்புகள் சார்பாக நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திதமிழீழத்தில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தி, தமிழீழம் உருவாக வேண்டும். இதுகுறித்து, தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.



தமிழகம் முழுவதும் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், அதேபோல் சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து ஜனநாயக அமைப்பு சார்பாக மீண்டும், மீண்டும் கேட்டுக்கொள்கிறோம். இந்தக் கோரிக்கைக்காக தொடர்ந்து நாம் போராடி வருகிறோம் என தெரிவித்தார்.

மேலும், இந்த கோரிக்கைகளை உலக அளவில் எடுத்துச் செல்ல வேண்டும் எனக்கூறிய அவர் இந்திய அரசு இலங்கைக்கு துணை போவதை நிறுத்த வேண்டும் என தெரிவித்தார். அதேபோல் தொடர்ந்து இலங்கையில் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து இந்திய அரசு இலங்கை அரசிடம் பேச வேண்டும்.

ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, தொடர்ந்து மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கிடைக்க இந்திய அரசு தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும். அதேபோல் தமிழகத்தில் ஏழு கோடி தமிழ் மக்களின் பண்பாடு, அரசியல், பொருளாதார உரிமைகளை வெளிப்படுத்தும் அரசாக தற்போதைய தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.



தொடர்ந்து மாநில உரிமைகளை மறுக்கின்ற அரசாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. ஆனால் மாநில அரசுகளின் உரிமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் விதமாக பேரறிவாளன் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது ஆளுநர் அதிகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச்சரிக்கை விடுத்துள்ளது உச்சநீதிமன்றம். அதேபோல் ஜிஎஸ்டி விவகாரம் தொடர்பாக தீர்பிலும் மாநில அரசின் அதிகாரத்தை உயர்த்திக் பிடித்திருக்கிறது.

பாஜக அரசு மாநில உரிமைகளை பறிக்க முயன்றதை உச்சநீதிமன்ற தீர்ப்பு அம்பலப்படுத்தியுள்ளது. வெளியுறவு கொள்கையில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது வைத்துள்ளோம். மேலும், இந்தியா முழுவதும் ஆளுநர்கள் ஒழிக்கப்பட வேண்டும், மாநில சுய ஆட்சியை உயர்த்திப் பிடிக்க கூடிய கூட்டணி அமைக்க வேண்டும். மதரீதியாக பிரிக்க நினைக்கும் பாஜகவை தமிழக மக்கள் ஒதுக்கி வைத்துள்ளனர்.

இந்திய அளவிலும் தற்போது விலக்கி வைக்கும் காலம் உருவாகி வருகிறது. நீதிமன்றமும் சட்டமன்றமும், மக்கள் மன்றமும் நீதி சார்ந்து கொடுக்கப்பட்ட தீர்ப்பு பேரறிவாளனின் விடுதலை. இதற்கு எதிராகப் பேசும் எந்த கட்சியாக இருந்தாலும் தமிழ் மக்கள் கோரிக்கைக்கு எதிரான கட்சியாக தான் கருதப்படும்.

பாஜகவை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய காங்கிரஸ், தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக செயல்பாட்டையே கொண்டு வருகிறது. டெல்லியிலிருந்து தமிழர்களை ஒடுக்க வேண்டும் என்ற கட்சியாகவே பாஜகவுடன் கை கொடுத்திருக்கிறது காங்கிரஸ் என தெரிவித்தார்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...