கோவை க.க.சாவடி அருகே தங்கியிருந்த ஓசூர் சங்கர பீடம் சவுபர்ணிகா சங்கர விஜயேந்திர புரி தங்கியிருந்த வீட்டில் பட்டாசுகளை வீசி சென்ற மர்ம நபர்கள் குறித்து க.க.சாவடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: நவக்கரையில் தங்கியிருந்த சங்கர விஜயேந்திர புரி சுவாமி வீட்டில் மர்ம நபர்கள் பட்டாசு வீசி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கேரளா மாநிலத்தை சேர்ந்த, ஓசூர் சங்கர பீடம், சுவாமி சவுபர்ணிகா சங்கர விஜயேந்திர புரி (41) என்பவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன் கோவை நவக்கரை பகுதிக்கு வந்துள்ளார். அவர் நவக்கரை பகுதியில் புதிய மடம் ஒன்றை கட்டும் பணியை துவக்க உள்ளார்.
அவருக்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் தங்கியுள்ள வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட அவரது கார் மீது 2-வெடி பொருளை மர்ம நபர்கள் வீசிச் சென்றதாக க.க.சாவடி போலீசில் புகார் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வெடி பொருள் நிபுணர்கள் மற்றும் க.க.சாவடி போலீசார் அந்த மர்ம பொருளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். முதல் கட்ட விசாரணையில் அங்கு கைப்பற்றப்பட்டது சாதாரண பட்டாசு தான் என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பட்டாசுகளையும் நெடுஞ்சாலை அருகே உள்ள இடத்தில் பிரித்து புதைத்தனர். மேலும் இந்த பட்டாசுகளை வீசிச் சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.