கோவையில் சிஐடியு பஞ்சாலை விசைத்தறி தொழிலாளர் தேசிய சிறப்பு மாநாடு..!

இதில், தற்போதைய விசைத்தறி தொழிற்சாலைகள், பஞ்சாலைகளின் நிலை, குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.



கோவை: கோவை மசக்காளிபாளையம் பகுதியில் தனியார் மண்டபத்தில் சிஐடியு பஞ்சாலை விசைத்தறி தொழிலாளர் தேசிய சிறப்பு மாநாடு நடைபெற்றது.

இதில், சிஐடியு அகில இந்திய தலைவர் ஹேமலதா, சிஐடியு அகில இந்திய உதவி தலைவர் பத்மநாபன், அகில இந்திய செயலாளர் கருமலையான், மாநில பொது செயலாளர் சுகுமாறன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.



இதில், தற்போதைய விசைத்தறி தொழிற்சாலைகள், பஞ்சாலைகளின் நிலை, குறித்தும் மத்திய மற்றும் மாநில அரசிடம் வைக்க வேண்டிய கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது.

இதில் செய்தியாளர்களிடம் பேசிய சிஐடியு அகில இந்திய செயலாளர் கருமலையான், இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக விசைத்தறி நூற்பாலை தொழில் பெரும்பாலான அந்நிய செலாவாணியத்தை ஈட்டி கொடுத்து கொண்டிருக்கிற தொழில் என தெரிவித்தார்.

இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 10-கோடி மக்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளனர் என தெரிவித்த அவர் அவர்களது பணி நிலைமை வாழ் நிலைமை குறித்து அறிவதற்காக தான் இந்த மாநாடு நடை பெறுவதாக தெரிவித்தார்.



மேலும், கொத்தடிமைத்தனம் நிலவும் தொழிலாக இந்த தொழில் இருப்பதாகவும் கூறினார். இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை ஊதியம் கிடையாது என தெரிவித்தார். காட்டன் பற்றாக்குறையில் திருட்டு தனம் நடந்து வருவதாக தெரிவித்தார். இது உற்பத்தி குறைவால் ஏற்பட்ட பிரச்சனை அல்ல என தெரிவித்த அவர், கள்ளதனம் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை என தெரிவித்தார்.

காட்டன் பற்றாக்குறையால் இந்தியாவில் தேவையான நூலை நாம் இன்னும் உற்பத்தி செய்யவில்லை எனவும், அதனை உற்பத்தி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் கிடைக்கின்ற நூலை உலக சந்தைக்கு ஏற்றுமதி செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.



என்டிசி ஆலைகளை பொறுத்தவரை மோடி அரசாங்கம் இதனை கொரோனாவை காரணம் காட்டி மூடிவிட வேண்டும் என்ற முடிவில் இருப்பதாகவும், உலக அளவில் இவ்விவகாரம் குறித்து கவனத்தை ஈர்க்க ஏதேனும் நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

அதனை அடுத்து பேசிய மாநில பொது செயலாளர் சுகுமாறன், மோடி அரசு வரும் போது இந்த தொழிலை காக்கும் என நம்பிய சிறு குறு முதலாளிகள் தான் தற்போது சிரமத்தை சந்தித்து வருவதாக தெரிவித்தார். அதற்கு காரணம் அரசாங்கம் தற்போது கடைபிடித்து வரும் கொள்கை தான் எனவும், எனவே இந்த கொள்கைகளைகைவிட்டு இந்த தொழிலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.





இதில் சுமார் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...