திருப்பூரில் 1-கோடி 60-லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்ட பணிகளை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்..!

15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 1-கோடி 60-லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு நீர் கால்வாய் அமைத்தல், தார்சாலை, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்தார்.


திருப்பூர்: பல்லடத்தின் பல்வேறு பகுதிகளில் 1-கோடி 60-லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பேங்க் ஸ்டாப், பி.ஏ.பி குடியிருப்பு, நல்லூர் பாளையம், இச்சிப்பட்டி ஊராட்சி பகுதிகளில் 15-வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் 1-கோடி 60-லட்சம் ரூபாய் மதிப்பிலான கழிவு நீர் கால்வாய் அமைத்தல், தார்சாலை, கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜை நடைபெற்றது.



இதில், தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

மேலும் அப்பகுதி பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...