துண்டிக்கப்பட்ட கையை வெற்றிகரமாக இணைத்த கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு தமிழக தலைமை செயலாளர் இறையன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் கணேஷ் 21, குடும்பத் தகராறில் அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் கடந்த 8-ஆம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒட்டுறுப்பு சிகிச்சை துறையினர் 5 மணி நேரம் சிகிச்சை அளித்து வெற்றிகரமாகக் கையை இணைத்தனர்.
இதனைப் பாராட்டி தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு அனுப்பியுள்ள கடிதத்தில் அறுவை சிகிச்சைக்கு உதவியாக இருந்த மருத்துவர்களும் மருத்துவ ஊழியர்களும் பாராட்டுக்கள் கோவை அரசு மருத்துவமனை இன்னும் பல சாதனைகள் மருத்துவத்துறையில் படைக்க வாழ்த்துக்கள் என கடிதம் எழுதியுள்ளார்.