கோடை குளிர்ந்தது-கோவையில் 39-சதவீதம் கூடுதல் மழை..!

கோடை மழை சீசன் நிறைவு பெறும் மே இறுதிக்குள் கோவைக்கு கூடுதலான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலுமே கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் வெயிலும், மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது.

கடந்த 2 தினங்களாக காலை முதல் இரவு வரை சாரல் மழையும், அவ்வப்போது கன மழையும் பெய்தது. நேற்று நள்ளிரவில் மாநகர் பகுதிகளில் மழை பெய்தது. இதேபோன்று புறநகர் பகுதிகளான பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது.

இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அக்னி நட்சத்திரம் காலத்திலும் மாவட்டம் முழுவதும் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவி வருகிறது. இந்த மழையால் வெப்பம் தணிந்து உள்ளதால் மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த ஆண்டு மார்ச் 1-ந் தேதி முதல் நேற்று வரை கோவை மாவட்டத்தில் 167.8-மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது இந்த கால கட்டத்தில் பெய்திருக்க வேண்டிய சராசரி கோடை மழை, 120-மி.மீ.யை காட்டிலும் 39-சதவீதம் ஆகும்.

இன்று முதல் 18-ந் தேதி வரை கோவை மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் கோடை மழை சீசன் நிறைவு பெறும் மே இறுதிக்குள் கோவைக்கு கூடுதலான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...