பஞ்சு விலை பிரச்சனை, கோவைக்கு கூடுதல் விமான சேவை: துணை குடியரசு தலைவரிடம் 'சைமா' தலைவர் கோரிக்கை..!

கோவை விமான நிலையத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவையைத் துவக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


கோவை: கோவையில் நேற்று மாலை சர்க்யூட் ஹவுஸ் வளாகத்தில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுடன் தென்னிந்திய மில்கள் சங்க (SIMA) தலைவர், ரவிசாம் சந்தித்து பேசினார்.

பஞ்சு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருவது குறித்தும், இப்பிரச்சினையால் ஒட்டு மொத்த ஜவுளி சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது குறித்து துணை குடியரசு தலைவரிடம் எடுத்துரைத்தார்.



மேலும், கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்பொழுது மூன்று வெளிநாடுகளுக்கு மட்டுமே விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் இலங்கை விமான சேவை அந்த நாட்டில் நிலவி வரும் பிரச்சினை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, கோவை விமான நிலையத்தின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு துபாய் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு விமான சேவையை துவக்க வேண்டும். உள்நாட்டு போக்குவரத்து பிரிவிலும் விமான சேவை அதிகரிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை துணை குடியரசு தலைவரிடம் வழங்கினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...