திருப்பூர்-கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம்..!

இதில், நூல் விலை உயர்வை கண்டித்தும், பதுக்கல் பஞ்சை வெளியில் கொண்டு வரவும், அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: நூல் விலை உயர்வை கண்டித்து திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.



திருப்பூர் கோவை மாவட்டங்களில் விசைத்தறி தொழில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. 3-லட்சம் விசைத்தறிகள் உள்ளன. நேரடியாகவும், மறைமுகமாகவும் 5-லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

ஜவுளி உற்பத்தியாளர்கள் பாவு நூல் கொடுத்து காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 3-கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் மே மாதம் பருத்தி நூல் அனைத்து ரகங்களின் விலையும் கிலோவுக்கு ரூ.40-வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி உற்பத்தியாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் 14- மாவட்டங்களில் பெருமளவு நடைபெறக்கூடிய விசைத்தறி மற்றும் கைத்தறி தொழில் உற்பத்தியில் அசாராணமான சூழ்நிலையை ஏற்படுத்தி உள்ளது.

பல ஆயிரக்கணக்கான உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பைச் சந்திப்பதுடன், இந்த தொழிலைச் சார்ந்து வேலை செய்யக்கூடிய லட்சக்கணக்கான தொழிலாளர் வாழ்வும் நெருக்கடி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் கோவை மாவட்ட ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நூல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரியும் 16,17-இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



பருத்தி, கழிவு பஞ்சு, நூல் ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும், பதுக்கல் பஞ்சை வெளியில் கொண்டு வரவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நூல் விலை உயர்வால் உற்பத்தி செய்துள்ள காடா துணிகளுக்கு நிலையான விலையை நிர்ணயம் செய்ய முடியாமல் ஏற்கனவே 100-கோடி ரூபாய் அளவிலான காடா துணிகள் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...