ஆழியாறு மற்றும் அமராவதி அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறப்பு..!

அமராவதி, ஆழியாறு அணையில் இருந்து, இன்று முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


திருப்பூர்: அமராவதி அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்துக்கு இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணை பழைய பாசனத்திற்கு உட்பட்ட முதல் 8-பழைய ராஜ வாய்க்கால்களின் (ராமகுளம், கல்லாபுரம், குமரலிங்கம், சர்க்கார் கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி, கணியூர், கடத்தூர் மற்றும் காரத்தொழுவு) பாசனப் பகுதிகளுக்கு 16-ந் தேதி முதல் வரும் செப்டம்பர் 28-ந் தேதி வரை 135-நாட்களில் 80-நாட்கள் தண்ணீர் திறப்பு, 55-நாட்கள் தண்ணீர் அடைப்பு என்ற அடிப்படையில் முதல் போக பாசனத்திற்கு அமராவதி அணையில் இருந்து 2,074-மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.

இதனால் திருப்பூர் மாவட்டத்தில் 7,520-ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமராவதி அணை வழியாக திருப்பூர், கரூர் மாவட்டத்தில் 54-ஆயிரத்து 637-ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கமாக அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு ஜூன் மாதம் தான் நீர் திறக்கப்படும் என்ற போதிலும், கடந்த ஆண்டு பருவ மழை போதுமான அளவு கிடைத்ததால், அணைக்கு நீர்வரத்து மற்றும் இருப்பு காரணமாக பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள ராஜ வாய்க்கால்களுக்கு மே 16-ல் தண்ணீர் திறக்கப்பட்டு, குறுவை, சம்பா சாகுபடிக்கு நீர் வழங்கப்பட உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...