கோவையில் பட்டதாரி இளைஞர்களுக்கு 'துலிப்' திட்டத்தின் கீழ் வேலை வாய்ப்பு பயிற்சி..!

http:internship.aicte--india.org என்ற இணையதளம் மூலமாக வரும், 24-ம் தேதிக்குள் தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: 'துலிப்' திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வேலைவாய்ப்பு பயிற்சிக்கு, பட்டதாரிகள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நகர்ப்புற கற்றல் வேலைவாய்ப்பு திட்டமானது (துலிப்), வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற அலுவல் அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆகியவற்றுக்கும் இடையிலான ஒரு கூட்டு முயற்சியாகும்.

'துலிப்' திட்டத்தின் கீழ், புதிய பட்டதாரிகள் தன்னம்பிக்கை பெறுவதற்கும், மாநகராட்சி

புதுமையான யோசனைகளை வழங்குவதற்கும், பயிற்சி களை கோவை 'ஸ்மார்ட் சிட்டி' நிறுவனம் அளிக்க முன்வந்துள்ளது.

அதன்படி, விண்ணப்பதாரர்கள் கடந்த, 18-மாதங்களுக்குள் பட்டப்படிப்பை முடித்தவர்களாக இருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பு பயிற்சி காலம் ஆறு மாதம். பயிற்சிக்கான மாத ஊக்கத்தொகை, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.

விஷூவல் கம்யூனிகேஷன், பி.ஆர்க்., எம்.ஆர்க்., பி.இ., பி.டெக்.,(ஐ.டி.,), எம்.பி.ஏ., 'பி.ஜி.டி.எம்., இன் ஈவென்ட் மேனேஜ்மென்ட்', எம்.ஏ., (தமிழ்/ஆங்கிலம்) கம்யூனிகேஷன் படித்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள். http:internship.aicte--india.org என்ற இணையதளம் மூலமாக வரும், 24-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பயிற்சி கால காலிப்பணியிட விபரங்களை, இந்த இணையதளத்தில் அறியலாம். ஆர்வமுள்ள, தகுதி வாய்ந்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...