கோவை வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றிய தன்னார்வலர்கள்..!!

முதல் மலையை முற்றிலும் சுத்தம் செய்த தன்னார்வலர்கள், ஏழாவது மலை வரையிலும் சென்று தங்களால் முடிந்த பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து வந்தனர். இரண்டு டிராக்டர் அளவு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.


கோவை: பூண்டியில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி மலை மற்றும் அதன் அடிவாரப் பகுதிகளில் நெகிழி கழிவுகள் அதிகமாக இருந்த நிலையில் கடந்த 2-நாட்களாக (13.5.2022, 14.5.2022)தன்னார்வலர்கள் அதை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.



350-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கடந்த இரண்டு நாட்களாக இரவும், பகலும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். முதல் மலையை முற்றிலும் சுத்தம் செய்த தன்னார்வலர்கள், ஏழாவது மலை வரையிலும் சென்று தங்களால் முடிந்த பிளாஸ்டிக் குப்பைகளை எடுத்து வந்தனர். இரண்டு டிராக்டர் அளவு குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது.



தமிழ்நாடு வனத்துறை (கோவை வனக்கோட்டம்) அனுமதியுடன் வன அலுவலர்கள், இந்து சமய அறநிலையத்துறை ஊழியர்கள் உதவியுடன், கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு, தென் கயிலாய பக்தி பேரவை, சிறுவாணி விழுதுகள், ஹிந்துஸ்தான் கல்வி குழுமம் NSS & NCC, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் மற்றும் தமிழ் கல்லூரி, ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, மற்றும் பெர்க்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியஅமைப்பின் தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

மேலும், JCB இயந்திரம் மூலம் குப்பைகள் அகற்றும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.







Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...