மஞ்சள் விலை நிலையாக இருக்கும் என தமிழ்நாடு வேளாண் பல்கலை தகவல்

இந்தியா, உலகின் முன்னணியில் மஞ்சள் உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளராக இருக்கிறது. நாட்டின் மஞ்சள் உற்பத்தியில் தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும்  ஒரிசா ஆகிய மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. 

தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் நாமக்கல் ஆகியவை மஞ்சள் பயிரிடப்படும் முக்கிய மாவட்டங்களாகும்.

இந்தியாவில் உற்பத்தியாகும் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 80 சதவிகிதம் இந்தியாவிலேயே நுகர்வு செய்யப்படுகிறது. மீதமுள்ள மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஐக்கிய அரபு நாடுகள், ஜப்பான், ஈரான், மலேசியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய அரசு நாடுகள் ஆகிய வெளிநாடுகளுக்கு மஞ்சள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் தொடர் வறட்சியினால் மஞ்சள் உற்பத்தி குறைந்துள்ளது. வர்த்தக மூலங்களின் படி, தமிழ்நாட்டில் 7 லட்சம் மஞ்சள் மூட்டைகள் நல்ல விலையை எதிர்பார்த்து இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு பருவத்தில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் மஞ்சள் உற்பத்தி அதிகரித்துள்ளதாக வர்த்தக மூலகங்கள் தெரிவித்துள்ளன. 

தமிழ்நாட்டில் தற்போது மஞ்சள் வரத்து அந்தியூர், பவானி, சத்தியமங்கலம் மற்றும் மைசூர் ஆகிய இடங்களில் இருந்து வருகிறது. மஞ்சள் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் உற்பத்தி குறைந்தாலும், மஹாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வரும் மஞ்சள் வரத்து தமிழ்நாட்டின் தேவைகளை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக, கடந்த 20 ஆண்டுகளாக ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிலவிய மஞ்சள் விலையை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் கீழ் இயங்கி வரும் விலை முன்னறிவிப்புத் திட்டம், ஆய்வு செய்து சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது.  

ஆய்வு முடிவின் அடிப்படையில் தரமான மஞ்சளின் பண்ணை விலை அறுவடையின் போது (பிப்ரவரி- மார்ச், 2017) குவிண்டாலுக்கு ரூ.8,200 முதல் ரூ.8,500 வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 

எனவே, விவசாயிகள் மேற்கண்ட விலை முன்னறிவிப்பின்படி விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்தான மேலும் விவரங்களுக்கு உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - 641003 என்ற முகவரிக்கோ அல்லது 0422-2431405 என்ற தொலைபேசி எண்ணுக்கோ தொடர்புகொள்ளலாம்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...