கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையின் வலது புறத்திற்கு இழுத்துச் சென்று, எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மீது மோதியதில் சம்பவ இடத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை: கோவையில் இரு சக்கர வாகனம் பஞ்சராகி சாலையில் சென்ற பள்ளி வாகனம் மீது மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை சுந்தராபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் புஷ்பராஜ் (45) மனைவி ஜோதி தனியார் பள்ளி ஆசிரியர். இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நேற்று காலை புஷ்பராஜ் தனது இரண்டாவது மகனை மதுக்கரை மார்க்கெட் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றார்.
மகனை பள்ளியில் இறக்கி விட்ட பின்னர், மீண்டும் தனது வீட்டிற்கு கிளம்பியுள்ளார். அப்போதுரயில்வே மேம்பாலம் பாலத்திற்கு அருகே வந்தபோது திடீரென இருசக்கர வாகனம் பஞ்சர் ஆனதாக தெரிகிறது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் சாலையின் வலது புறத்திற்கு இழுத்துச் சென்றதில், எதிரே வந்த தனியார் பள்ளி வேன் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த புஷ்பராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.