அந்நியச் செலாவணி மோசடி வழக்கு: ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபரை கைது செய்த சிபிஐ; கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த வாகாஷ் (31) என்பவரை அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர்.



கோவை: வெளிநாடுகளில் இருந்து நன்கொடை வசூலிப்பதில் முறைகேடு செய்து இருப்பது தொடர்பாக நாடு முழுவதும் 40 க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர்.

டெல்லி, மும்பை, ராஜஸ்தான், மைசூர், சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வருகின்றனர். ஒரு சில இடங்களில் இந்த சோதனை இரண்டாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் சேனாதிபாளையம் பகுதியை சேர்ந்த வாகாஷ் (31) என்பவரை அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று இரவு கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சேர்ந்த வாகாஷ் கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 13 ம் தேதி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கைதி போக்குவரத்து பிடியாணை பிறப்பித்து சிபிஐ நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் உத்திரவிட்டார்.

இதனையடுத்து ஈரோட்டைச் சேர்ந்த வாகாஷ், கோவை நீதிமன்றத்தில் இருந்து டெல்லி அழைத்து செல்லப்பட்டார்.

வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் பல்வேறு முறைகேடு நடைபெறுவதாகவும், உள்துறை அமைச்சக ஊழியர்கள், தன்னார்வலர்கள், இடைத்தரகர்கள் இணைந்து கூட்டாக மோசடியில் ஈடுபடுவதாக கிடைத்த தகவலின் பேரில், சிபிஐ அதிகாரிகள் உள்துறை அமைச்சக ஊழியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக, நாடு முழுவதும் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதுடன் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...