உற்பத்தியாளர்களுக்கு நல்லதொரு திட்டத்தை மத்திய அரசு அறிவிக்கும் என திருப்பூர் எக்ஸ் போர்டேர்ஸ் போரம் அமைப்பினர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக பாஜக தலைவர் வாக்குறுதி அளித்தார்.
திருப்பூர்: தமிழக பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை, திருப்பூர் எக்ஸ் போர்டேர்ஸ் போரம் அமைப்பினர் சந்தித்து பேசியுள்ளனர்.
இதுகுறித்து திருப்பூர் எக்ஸ் போர்டேர்ஸ் போரம் அமைப்பினர் கூறியதாவது:-
திருப்பூர் எக்ஸ் போர்டேர்ஸ் போரம் சார்பில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையை நேற்று (09.05.2022) சந்தித்தோம். அப்போது மத்திய நிதி அமைச்சரின் பல்வேறு நிகழ்ச்சிகளில் அவருடன் கலந்து கொண்ட அந்த நெருக்கடியிலும் உங்களிடம் மேம்போக்காகபேசுவதில் பயனில்லை விரிவாக பேச வேண்டும். உங்களின் பிரச்சனைகளை உங்கள் கோணத்திலிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என கூறி அதற்கான நேரத்தை ஒதுக்கி தந்தார்.
சொன்னபடியே மாலை சந்தித்தார். ஏற்கனவே பல்வேறு அமைப்புகளின் வாயிலாக பெற்ற தரவுகளை வைத்திருந்தாலும் எங்களின் கருத்துக்களை மிகவும் கவனத்துடன் கேட்டறிந்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்த சந்திப்பில் அரசியல் மற்றும் அரசு சார்பு நிலைகளை துறந்து எவ்வாறு இந்த தொழில் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளது.
அதை எவ்வாறு எதிர் கொண்டு மீண்டு பின்னலாடை தொழிலில் மட்டுமே நாடு முழுவதும் சேர்ந்து 1.5 டிரில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியை உயர்த்துவதற்கான வழிகளை முன்னெடுங்கள். உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என உறுதியளித்தார்.
காட்டன் அட்வைசரி போர்டு (COTTON ADVISORY BOARD - CAB) என்கிற அமைப்பு பஞ்சு உற்பத்தியாளர்கள், ஜின்னிங் துறையை சேர்ந்தவர்கள், நூற்பாலையை சேர்ந்தவர்கள், துணிமற்றும் ஆடை உற்பத்தியாளர்கள், ஜவுளி அமைச்சகத்தின் மத்திய மாநில அரசு அதிகாரிகள்உள்ளிட்டவர்களை இணைத்து மத்திய ஜவுளி அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பு, இந்த அமைப்பின் பணி, ஒவ்வொரு வருடமும் எவ்வளவு பஞ்சு இந்தியாவில்விளைவிக்கப்படுகிறது.
அதில் எவ்வளவு உள்நாட்டிற்கான தேவை, உற்பத்தி குறைந்தால் அதற்கான காரணங்கள், எதிர்கால தேவை, அதற்கேற்ப உற்பத்தி பெருக்கம், தேவைக்கு மேல் உற்பத்தி இருப்பின் மட்டுமே ஏற்றுமதிக்கு அனுமதி போன்ற விஷயங்களை அரசுக்கு அறிவுறுத்தும் அமைப்பு, 2020 ம் ஆண்டு மினிமம் கவர்மெண்ட் மேக்ஸிமம் கோவெர்னன்ஸ் (Minimum Government Maximum Governance) என்கிற அடிப்படையில் இந்த அமைப்பு கலைக்கப்பட்டது.
அதன் பிறகு COCPC (Committee on Cotton Production and Consumption) என்கிற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு அந்த அமைப்பில் பஞ்சு மற்றும் நூலின் நுகர்வோர்களான துணி மற்றும் ஆடை உற்பத்தியாளர்கள் சேர்க்கப்படவில்லை, அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டால் மட்டுமே நுகர்வின் தேவைகள் குறித்து அரசிற்கு சரியான கணக்குகளை கொடுக்க இயலும் என எடுத்து கூறினோம். நிச்சயம் இது ஒரு சரியான பார்வையும், உடனடியான தேவையும் கூட இதையும் மத்திய அரசுக்கு தெரிவித்து நுகர்வோர்களையும் இந்த கமிட்டியில் இடம் பெற செய்வதற்கான முயற்சிகளை செய்கிறேன் என கூறினார்.
உலகில் பஞ்சு உற்பத்தியில் முதன்மையான நாடு. ஆனால் உலகின்ஆடைதேவைகளை 4 சதவீதத்திற்கு குறைவாக பூர்த்தி செய்கிறோம், அண்டை நாடான வங்கதேசம் உலக தேவையில் 14 சதவீதம் பூர்த்தி செய்கிறது. ஆனால் பஞ்சு உற்பத்தி என்பது அவர்களின் தேவைக்கு 1 சதவீதத்திற்கும் குறைவாக உற்பத்தி செய்கின்றனர். கடந்த சில வருடங்களில் இந்திய-வங்கதேசத்திற்கு இடையிலான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி ஏரளமான ஆயத்த ஆடைகளை நம் நாட்டிற்கு வங்கதேச உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்து வருகின்றனர்.
பெரும்பாலான முன்னணி ஸ்டோர்கள்மற்றும் பிராண்ட் விற்பனையகங்களுக்கு சென்றால் 10 ஆடைகளில் 4 ஆடைகள் வங்கதேசத்திலிருந்துஇறக்குமதி செய்து விற்பனைக்கு வந்துள்ளதை காணலாம் என்றோம். இது உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வருவதை சுட்டிக் காட்டினோம்.
அனைத்து கருத்துக்களையும் மிகவும் பொறுமையுடன் உள்வாங்கி, தான் ஏற்கனவே அறிந்த பல்வேறு பிரச்சனைகள் உடன் ஒப்பிட்டு பிரதமரின் தனி கவனத்திற்கு செல்லுமாறு ஒரு குறிப்பினை தயார் செய்து அனுப்புகிறேன் என உறுதியளித்தார். பொதுவாக ஆட்சியில் உள்ள கட்சி தலைவர்கள் பிரச்சனைகளை மேம்போக்காக அணுகி செல்லும் கால சூழலில், மிகவும் வெளிப்படையாகவும் களஎதார்த்தத்தை உணர்ந்து,பிரச்சனைகள் உள்ளது, உற்பத்தி சங்கிலியில் உள்ளஒவ்வொருவரும் அவரவர் பிரச்சனைகளை கூறுகின்றனர்.
ஒருவருக்கான அரசின் சலுகை அடுத்தவரை பாதிப்பதை என்னால் உணர முடிகிறது. அனைவரையும் இணைத்துக்கொண்டு அனைவருக்குமான வளர்ச்சியே மத்திய அரசின் தாரக மந்திரம். அதில் உள்ள இடையூறுகளை களைந்து மேற்கொண்டு பயணிக்க உங்களை போன்றவர்களின் கருத்துக்கள் அவசியம். உற்பத்தி சங்கிலியில் அனைவரும் பயனுறும் வகையில் நல்லதொரு திட்டத்தை விரைவில் மத்திய அரசு அறிவிக்கும். தற்போதைய நெருக்கடியை போக்குவதற்கான அறிவிப்புகள் விரைவில் வரும் என உறுதியான நம்பிக்கை அளித்தார்.
கடந்த 2 ம் தேதி நூல் விலை கிலோ ரூபாய் 40 உயர்ந்த நிலையில் செய்வதறியாது தொழில்துறை ஸ்தம்பித்து நின்றபோது எனது அன்பு நண்பர் வழக்கறிஞர் சண்முகவடிவேல், எங்கள் மாநிலத் தலைவரை சந்தியுங்கள். உடனடி தீர்வு கிடைக்குமா என தெரியாது ஆனால் உறுதியாக நீண்ட கால தீர்வுக்கு வழி வகுப்பார் என கூறி திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவராக இரண்டாம் முறை பொறுப்பேற்றிருக்கும் எனது நீண்ட கால நண்பர் செந்தில்வேலிடம் மாநில தலைவரை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கேட்க செய்தார்.
செந்தில் வேலிடம் கூறியவுடன் நேரம் வாங்கி தந்ததோடு எங்களுடன் இறுதிவரை பொறுமையாக உடனிருந்து உதவினார். மத்திய அரசுக்கு பிரச்சனைகளின் தீவிரத்தை உணரச் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த திருப்பூர் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் செந்தில் வேல், உறுதுணையாக நின்ற வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் சண்முக வடிவேல் ஆகியோருக்கு திருப்பூர் எக்ஸ் போர்டேர்ஸ் போரம் சார்பாக நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறோம்.