பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாரும் வேறு எந்த கட்சிக்கும் போக மாட்டார்கள் எனவும், காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் அடுத்த 10 ஆண்டுகளில் அழியும் என தெரிவித்தார்.
கோவை: கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவுசெய்தியாளர்களைசந்தித்தார்.
தருமபுரி எம்.பி செந்தில்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில்'திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜகவினரே, உங்களுக்கு ஒரு தகவல்.
உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக வில் தொடர்பில் உள்ளார்கள். எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம்"என்ற அவர் பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜகவில் உள்ள நான்கு எம்.எல்.ஏக்களில்அவர் யாரை குறிப்பிடுகிறார் என்று பாஜகவினர் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், கோவை சித்தாபுதூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவுசெய்தியாளர்களைச்சந்தித்தார். அப்போது, இலங்கையில் இன்று நிலைமை மோசமாக இருப்பதாகவும், இலங்கைக்குப் பக்கத்துக்கு நாடு என்கிற அடிப்படையிலும்தமிழக மக்களின் நலன் கருதியும் நாம் உதவி செய்கிறோம் என தெரிவித்தார்.
இங்குள்ளவர்கள் இலங்கையை வைத்து அரசியல் செய்து வருகிறார்கள் எனக் கூறிய அவர், இலங்கை தமிழர்கள் கப்பல் மூலம் இந்தியா வரமுடியவில்லை எனவும், கொழும்பிலிருந்து, ஜாப்னாவிற்க்கு நிதி உதவி அளித்து ரயில் மூலம், விமான நிலையத்திற்கு வரவழைக்க இந்தியா நடவடிக்கை எடுத்து வருகிறது என்றார்.
மேலும், அங்குள்ள தமிழர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது, ஆனால்தீர்வே இல்லாமல், இங்குள்ளவர்கள், கத்தி கொண்டு இருக்கிறார்கள் என தெரிவித்தார். இலங்கைக்கு டீசல், பெட்ரோல், உணவு பொருட்கள், மருத்துவ உதவிஉள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்துள்ளோம் எனவும், இலங்கையில் ஏற்பட்ட புண்ணுக்கு, இந்தியா மருந்து கொடுத்து வருகிறது எனவும் தெரிவித்த அவர், இலங்கையில்14 லட்சம் அரசு அதிகாரிகள் உள்ளனர், வருமானத்தில் 70 சதவீதம் அதிகாரிகளின் சம்பளத்திற்கே போய்விடுகிறது என்றும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் தமிழர்கள் நலமாக இருக்க தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும், சீனா இந்தியாவிற்கு உதவுவது இலங்கை மக்களின் இரத்தத்தை உறிஞ்சுவதற்கு எனவும் தெரிவித்தார்.
வடகிழக்கு பகுதியில் 46000 வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது எனவும், மலையக பகுதி மக்களுக்காக 16000 வீடுகள் கட்டித் தந்துள்ளோம் எனவும் தெரிவித்த அவர், இலங்கை கடனை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று இலங்கை, இந்தியாவிடம் கேட்பது
நியாமில்லை என்றும் தெரிவித்தார்.
தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்பது தமிழகத்தில் இந்தியை திணிக்க கூடாது, மொழியை திணித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
செய்திக்காகக் கருத்து சொல்பவர்களுக்கு நான் எப்படி கருத்து சொல்வது என தருமபுரி எம்.பி.செந்தில் கூறிய கருத்துக்குபதிலளித்த அவர், பாஜக சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்ட யாரும் வேறு எந்த கட்சிக்கு போக மாட்டார்கள் என தெரிவித்தார்.
காங்கிரஸ் அழிவது போல் திமுகவும் 10 ஆண்டுகளில் அழியும் என தெரிவித்த அவர், மீண்டும் பிரஷாந்த் கிஷோர்தமிழகத்திற்கு வந்து, திமுகவிடம் மீண்டும் ஒப்பந்தம் போட்டு கட்சியை வளர்பார் எனக் கூறினார்.
எல்.ஐ.சி இன்னும் அரசு நிறுவனம் தான் என தெரிவித்தார். இழப்பை சந்திக்கின்ற நிறுவனத்தை தனியாருக்கு கொடுக்கிறோம் எனக்கூறிய அவர், நானும் ராஜா என்று கூறி, தமிழக முதல்வர் இப்போது தான் துபாய்க்கு போய்விட்டு வந்தார்.
தமிழக முதல்வரை புகழ்ந்து தள்ளிய விக்கிரமராஜா, தேர்தலுக்கு முன் மால்கள் ஏதும் தமிழகத்தில் வர அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னார். ஆனால் லூலு மால் வருவதற்கு காரணமானவரை விக்கிரமராஜா புகழந்து தள்ளுகிறார். திருமாவளவனை விவாதத்துக்கு கூப்பிட்டேன், அப்போது அந்த கட்சியிலிருந்து ஒரு தம்பி வந்து, நான் விவாதத்துக்கு வருகிறேன் என்றார். ஆனால் திருமாவளவன் அங்கு யாரும் செல்லாதீர்கள் என்று சொல்லிவிட்டார்.
நான் மூன்று புத்தகம் அவருக்கு அனுப்பிவிட்டேன். ஆனால் அங்கிருந்து ஏதும் வரவில்லை. விவாதத்திற்கும் வரவில்லை என தெரிவித்தார். தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்த முடியாது என்பது தேர்தலுக்கு முன்பு தெரியாதா ? என கேள்வி எழுப்பிய அவர், தேர்தலுக்காக கவர்ச்சியான திட்டங்களைக் கொண்டு வந்து பொய் சொல்லி வாக்கு வாங்கி விட்டு, இப்போது நிலைப்பாட்டை மாற்றுகிறார்கள் எனவும், ஆறு மாதத்திற்கு முன்னே கோவையில் லூலு மால் வருவதற்கு ஆயத்த பணிகளை மேற்கொண்டு பணிகளைச் செய்ய துவங்கிவிட்டார்கள் என தெரிவித்தார்.
ஆனால் லூலு மால் வருவதற்கு ஒப்பந்தம் இப்போது போட்டதாகச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள் என தெரிவித்த அவர், மின் தட்டுப்பாடு எதனால் என்று அமைச்சரிடம் கேட்டால் நிலக்கரி தட்டுப்பாடு என்கிறார்கள். தமிழகத்தில் மணல் கடத்துபவர், தண்ணீர் லாரி ஓட்டுபவரையெல்லாம் அமைச்சர் ஆக்கினால் இப்படித்தான் பேசுவார்கள் என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.