ஈச்சனாரி பிரிவு முதல் செட்டிபாளையம் வரை நடைப்பெற்ற மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட, 14-வயதிலிருந்து 18-வரை உள்ள பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். இதில் முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.
கோவை: கோவையில் தடுப்பூசி விழிப்புணர்வு மோடி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்கவேண்டும் என்ற அடிப்படையில், மாணவர்கள் அனைவரும் உற்சாக மனநிலையில் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோவையில்தடுப்பூசி விழிப்புணர்வு "மோடி" மாரத்தான்போட்டி கோவை பாஜக சார்பில் நடைபெற்றது.
பாஜக மாநில பொதுச்செயலாளர் ஏபி முருகானந்தம், பாஜக கோவை நகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் ஆகியோர் கொடியசைத்து வைத்தனர்.

ஈச்சனாரி பிரிவு முதல் செட்டிபாளையம் வரை நடைப்பெற்றமாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்ட, 14-வயதிலிருந்து 18-வரை உள்ள பள்ளி மாணவர்கள் இப்போட்டியில் பங்கேற்றனர்.
இப்போட்டியில், ஆறு கிலோமீட்டர் பயணம் தூரம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைந்து வெற்றி பெறுபவருக்கு முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.