தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெறுவதைத் தடுப்பதற்கு உதவி திட்ட அலுவலர் செந்தில் குமார் தலைமையில், சிறப்பு தேர்வு கண்காணிப்பாளர் பறக்கும் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.
கோவை: வால்பாறையில் 6-தேர்வு மையங்களில் 532-பேர் 10-வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2-வருடமாக 10-வகுப்பு தேர்வுநடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு தேர்வு நடக்கிறது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 10-வகுப்பு தேர்வு இன்று துவங்கியது. வால்பாறை பகுதியில் 6-தேர்வு மையங்களில் 532-மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.
இதில், வால்பாறை உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையாறு அணை மேல்நிலைப்பள்ளி, சின்கோனா மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, தூய இருதய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பியூலா மெட்ரிக் பள்ளி ஆகிய பள்ளி மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர்.

10-வகுப்பு பொது தேர்வு எழுத வரும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். அதே போல, தேர்வு மையங்களுக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து தேர்வு மையங்களில் ஒவ்வொரு மாணவருக்கும் இடையே இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுதுகின்றனர். மாணவர்கள் தேர்வு மையத்தில் முறைகேடு நடைபெறுவதைத் தடுப்பதற்கு உதவி திட்ட அலுவலர் செந்தில் குமார் தலைமையில், சிறப்பு தேர்வு கண்காணிப்பாளர் பறக்கும் படையினர் பார்வையிட்டு வருகின்றனர்.
வால்பாறை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவிகள் இரண்டு பேர்கள் தேர்வு எழுதுகின்றனர். வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 250-மாணவர்களும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 86-மாணவிகளும் சோலையாறு அணை மேல் நிலைப்பள்ளியில் 28-மாணவர்களும், சின்கோனா பள்ளியில் 17-மாணவர்களும் தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் 60- மாணவிகளும், தூய இருதய மெட்ரிக் பள்ளியில் 91-மாணவர்களும் தேர்வு எழுதுகின்றனர். இதில் 18-மாணவர்கள் இன்று தேர்வு எழுத வரவில்லை.