"ரன் பார் காயர்"- தேசிய கயிறு வாரிய மாநாடு கோவையில் துவக்கம்: மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு..!

இன்று கோவையில் நடைபெற்ற தேசிய கயிறு வாரியம் சார்பில் "ரன் பார் காயர்" (Run For Coir) மாரத்தான் போட்டியை மத்திய அமைச்சர்கள் நாராயண் ரானே மற்றும் பானுபிரதாப் சிங் வர்மா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


கோவை: தேசிய கயிறு வாரியம் சார்பில் "ரன் பார் காயர்" மராத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது.



கொச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காயர் போர்டு மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நிறுவனம், இந்திய அரசின் கயிறு வாரியத்துடன் இணைந்து, தேசிய கயிறு வாரிய மாநாட்டினை நேற்று (மே 5-ம் தேதி) கோவை அவினாசி சாலையில் உள்ள லீ மெரிடியன் ஓட்டலில் நடத்தியது.

75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் ஆசாதி க அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே தலைமை விருந்தினராக பங்கேற்றார். இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா மற்றும் காயர் போர்டு தலைவர் குப்புராமு ஆகியோர் கலந்து கொண்டனர்.



இதன் தொடர்ச்சியாக காயர் மாரத்தான் போட்டி இன்று காலை “ரன்பார் காயர்" என்ற பெயரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி கோவை நேரு விளையாட்டு அரங்கில் காலை 6.30 மணிக்கு துவங்கியது.

காயர் போர்டுடன், கோவை மாவட்ட அத்லெட்டிக் அமைப்பு இணைந்து இந்த மாரத்தான் போட்டியை நடத்தியது. இந்த போட்டியை மத்திய அமைச்சர் நாராயண் ரானே மற்றும் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.



மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் செயலாளர் பி. பி. ஸ்வைன், காயர் போர்டு தலைவர் குப்புராமு, மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சைலேஷ் குமார் சிங் மற்றும் இணை செயலாளர் அல்கா அராரோ ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் கருத்தாக்கம், “உலக வெப்ப மயமாதலை மீட்க தீர்வு - கயிறு நார்" என்பதாகும்.

இந்த மாரத்தான் போட்டியில் 1,500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முதல் பிரிவில் 8-ம் வகுப்புக்கு மாணவ மாணவியர்களும், இரண்டாம் பிரிவில் 9-முதல் 12-வகுப்பு படிக்கும் மாணவ மாணவியர்கள், பின்னர் கல்லூரி மாணவ-மாணவியர்களுக்கானது மூன்றாம் பிரிவு, மற்றும் நான்காவது பிரிவு 18–வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.



இந்த மாரத்தான் போட்டி நேரு விளையாட்டு அரங்கின் முகப்பில் துவங்கி, நேரு விளையாட்டு அரங்கை ஒரு முறை சுற்றி, ஆபீசர்ஸ் கிளப் வழியாக, ஏ.டி.டி. காலனி வழியாகச் சென்று பாலசுந்தரம் ரோடு பெண்கள் பாலிடெக்னிக் வரை சென்று மீண்டும் அதே வழியாக திரும்ப அண்ணா சிலை வரை சென்று மீண்டும் அதே பாதையில் ஏ.டி.டி. காலனி கேரளா கிளப் வழியாக மீண்டும் நேரு ஸ்டேடியத்தை வந்தடைந்தது.



இதில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர், அமைச்சர்கள் பொள்ளாச்சியில் உள்ள கயிறு நார் தொழிற்சாலை களுக்குச் சென்று பார்வையிட உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...