ரமலான் பண்டிகை: கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் சிறப்பு தொழுகை..!

நம் இந்திய திருநாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உலக மக்கள் போர் பயமின்றி நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.



கோவை: கோவை மாநகர ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக பெருநாள் சிறப்பு தொழுகை, கோவை கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் இன்று (12-08-2019) காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.



கரும்புக்கடை ஹிதாயா பெண்கள் கல்லூரியின் தாளாளரும், மஸ்ஜிதுல் இஹ்ஸான் பள்ளியின் இமாமுமான, மௌலவி முஹம்மது இஸ்மாயில் இம்தாதி சிறப்பு தொழுகையை வழிநடத்தினார். தொழுகைக்குப் பிறகு சிறப்புரை ஆற்றினார்.



அவர் தனது உரையில், பெருநாளை கொண்டாடும்ஒவ்வொருவரும் தங்கள் உற்றாருக்கும், ஏழைமக்களுக்கும்உதவிகள் செய்து, எல்லா மக்களும் உவகையோடு இந்த திருநாளை கொண்டாட ஆலோசனைகள் வழங்கினார்.மேலும் வரும் காலம் வசந்த காலமாக அமைய, இன்றைய நாட்களில் இளைஞர்கள் சமூகப்பணிகளில் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

மேலும், நம் இந்தியத் திருநாட்டிலும் மற்றும் உலகெங்கிலும் போர் மற்றும் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், உலக மக்கள் போர் பயமின்றி நிம்மதியுடனும் ஒற்றுமையுடனும் வாழவும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.



உலகில் எல்லா பகுதிகளிலும் நீதியும், நிலையான ஆட்சியும் அமையவும், மக்கள் சகோதரத்துவ உணர்வோடு வாழவும், இருகரம் ஏந்தி இறைவனிடம் மனமுருகிபிரார்த்தனை நிகழ்த்தப்பட்டது.

இந்த பெருநாள் தொழுகை நிகழ்வில்ஆண்கள் - பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் பன்னிரெண்டாயிரம் முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...