ரமலான் பண்டிகை: கோவை வால்பாறை பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை..!

கொரோனா என்னும் பெருந்தொற்று நாட்டை விட்டு அகல வேண்டும் உலக மக்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.


கோவை: வால்பாறை பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் ரமலான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

ஈகைப் பெருநாளாம் இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகையான ரமலான் பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதமாக நோன்பு இருந்தஇஸ்லாமிய மக்கள் இன்று நோன்பு துறந்துபள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பாகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் காலை 9 மணி அளவில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இத்தொழுகை பேஷேஇமம் அப்புதுரசித், பள்ளிவாசல் முத்தவள்ளி NK.கமலுதின் ஆகியோர்கள் தலைமையில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனர்.



பின்னர் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி ரமலான் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஈகைத் திருநாள் அன்று இல்லாத ஏழை எளிய மக்களுக்கு இஸ்லாமியர்கள் தாங்களால் இயன்ற உதவிகளை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனாஅச்சுறுத்தல் காரணமாக ரமலான் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை. இந்தாண்டு கொரோனா பெருந்தொற்றுகுறைந்துள்ள நிலையில், மக்கள் ஆர்வத்துடன் சிறப்புதொழுகையில் ஈடுபட்டு உள்ளனர்.



கொரோனா என்னும் பெருந்தொற்று நாட்டை விட்டு அகல வேண்டும் உலக மக்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்ட தாகவும் இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...