நெருக்கடியில் 'பின்னலாடை நிறுவனங்கள்': நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.40- உயர்வு- திருப்பூர் தொழில்துறையினர் அதிர்ச்சி..!

கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30-உயர்ந்திருந்த நிலையில், நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.40- உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.



திருப்பூர்: நடப்பு மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.40-உயர்ந்துள்ளதால் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. பின்னலாடை தயாரிப்புக்கு மிக முக்கிய மூலப்பொருளாக இருந்து வருவது நூல் ஆகும்.

தொழில்துறையினர் தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூல்களை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிப்பார்கள். நூல் விலை உட்பட மூலப்பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு ஆடைகளின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், நூல் விலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால், தொழில்துறையினர் ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் குழப்பம் ஏற்படும். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நூல் விலை உயர்ந்து வருகிறது. எனவே நூல் விலையை குறைக்க வலியுறுத்தி போராட்டமும் திருப்பூரில் நடந்தது.

கடந்த மாதம் நூல் விலை கிலோவுக்கு ரூ.30-உயர்ந்திருந்தது. இந்நிலையில், நடப்பு மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டன. இதில், நூல் விலை கிலோவுக்கு மேலும் ரூ.40- உயர்த்தி நூற்பாலைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

இதனால், திருப்பூர் தொழில் துறை அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்படி ஒரு கிலோ 20-வது நம்பர் கோம்டு நூல் ரூ.403-க்கும், 24-ம் நம்பர் ரூ.415-க்கும், 30-ம் நம்பர் ரூ.425-க்கும், 34-ம் நம்பர் ரூ.445-க்கும், 40-ம் நம்பர் ரூ.465-க்கும், 20-ம் நம்பர் செமி கோம்டு நூல் கிலோ ரூ.395-க்கும், 24-ம் நம்பர் 405-க்கும், 30-ம் நம்பர் ரூ.415-க்கும், 34-ம் நம்பர் 435-க்கும், 40-ம் நம்பர் ரூ.455-க்கும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...