கோவையில் 'கோடை மழை' 57-சதவீதம் அதிகம்: விவசாயிகள் மகிழ்ச்சி..!

மாவட்டத்தில் மார்ச் 1 முதல் நேற்று முன்தினம் வரை 109 மி.மீ., கோடைமழை பெய்துள்ளது. இது இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் கோடைமழையை காட்டிலும் 57 சதவீதம் அதிகம்.


கோவை: கோவை மாவட்டத்தில் இதுவரை 57-சதவீதம் கூடுதலாக கோடைமழை பெய்துள்ள நிலையில், வரும் நாட்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மார்ச் 1 முதல் நேற்று முன்தினம் வரை 109 மி.மீ., கோடைமழை பெய்துள்ளது. இது இந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்யும் கோடைமழையை காட்டிலும், 57 சதவீதம் அதிகம். கோடைமழை மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்வதால் கோடை வெயில் உஷ்ணம் குறைந்துள்ளது.

வால்பாறையில், பெய்யும் மழையால், ஆறு, ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களில், நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், கோடை மழையை பயன்படுத்தி, விவசாயிகள் சித்திரை பட்டத்தில் சாகுபடிக்கு நிலத்தை உழவு செய்து தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோடை மழையை தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்தால், இந்தாண்டு பயிர் சாகுபடிக்கும், பாசன தேவைக்கும் தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று முதல் நான்கு நாட்களுக்கு கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...