பெரியார், பிராமணீயத்தை வெறுத்தார், பிராமணர்களை வெறுக்கவில்லை - கோவையில் நடிகர் சிவக்குமார் பேச்சு..!

சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.



கோவை: கோவை மாவட்டம்  சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், சமீபத்தில் தமிழக அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா  நடைபெற்றது. 

சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.



இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறைய தொடர்பு உண்டு என தெரிவித்தார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை பெரியார் அவமரியாதை செய்தது இல்லை எனவும் குன்றக்குடி அடிகளார் இருக்கையில்அமர்ந்திருந்த போதுஅவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் எனவும் தெரிவித்தார்.

ஆதிக்க சக்திகளைத் தான் அவர் வெறுத்தார் என்றும் பிராமணீயத்தை தான் அவர் வெறுத்தார் என்றும் பிராமணர்களை வெறுக்கவில்லை என கூறினார். மேலும் காஞ்சி பெரியவர் மயிலாப்பூர் வந்த பொழுது தி.க. தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்வதைக் கேள்விப்பட்டு, அவர்களுக்கு அறிவுரை கூறி காஞ்சிப் பெரியவருக்குப் பாதுகாப்பு கொடுத்தார் எனவும் தெரிவித்தார்.



பிறர் உணர்வுகளை மதித்தவர் ஆனால் இப்பொழுது அந்த உணர்வுகளுக்கு மதிப்பில்லாமல் போய்விட்டதுஎன தெரிவித்தார். இந்த விழாவில் சூலூர் தமிழ் சங்க தலைவர் பொன்முடி,மன்னவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...