தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்..!

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது.



கோவை: தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் டாக்ட் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது.

இந்த நிர்வாகிகள் கூட்டம் சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் ஜே.ஜேம்ஸ் தலைமையில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் G.பிரதாப்சேகர், பொருளாளர் M.லீலாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்கள் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர்கள் மாவட்டச் செயலாளர்கள் துணைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

தீர்மானங்கள்:-

1. இரண்டு ஆண்டு காலமாக குறுந்தொழில்கள் நிலை கடுமையான நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு தொடர்ந்து தொழில் முனைவோர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொண்டு வருகிறார்கள் வங்கியில் கடன் கிடைக்கப்பெற்ற தொழில்முனைவோர்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாமலும் வங்கி கடன் கிடைக்கப்பெறாத குறுந்தொழில் முனைவோர்கள் தனியார் நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமலும் அவமானங்களையும் சந்தித்து தங்கள் இயந்திரங்கள் கிடைக்கின்ற விலைக்கு விற்று கடனைக் கொடுத்தும் கடன் கொடுக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

மத்திய அரசைத் தொடர்ந்து குறுந்தொழில்களைப் பாதுகாக்கத் தனி கடன் திட்டத்தை அறிவிக்கக் கோரியும், இதுவரை அறிவிப்புகள் எதுவும் இல்லாமல் செய்வது அறியாமல் குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் அவர்களிடம் பணிபுரியும் தொழிலாளிகள் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறிக்கொண்டிருக்கிறது அரசு உடனடி நடவடிக்கை எடுத்து நெருக்கடியிலிருந்து தொழில்களைப் பாதுகாக்க வழிகாட்டவேண்டும் உதவ வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

2. ஜிஎஸ்டி 2017 இல் இருந்து 2020 வரை காலம் தாழ்த்தி ஜிஎஸ்டி கட்டிய தொழில் முனைவோர்களுக்கு அபராத வட்டி போட்டு கட்டச் சொல்லி நெருக்கடி கொடுத்து வருகின்றார்கள். மத்திய அரசு இந்த அபராத வட்டியை வசூலிப்பதிலிருந்து குறுந்தொழில்களை விடுவித்துப் பாதுகாக்க வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

3. ஜாப் ஆர்டர் செய்கின்ற குறுந்தொழில் முனைவோர்களுக்கு ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து தொழில்முனைவோர்கள் கோரி வருகிறோம். ஜிஎஸ்டி கவுன்சில் அதைக்குறித்து ஆண்டுகள் பல கடந்தும் இன்றுவரை தொழில் முனைவோர்களைப் பாதுகாக்க உதவ முன்வரவில்லை மத்திய அரசு உடனடியாக ஜாப் ஆர்டர் செய்கின்ற தொழில் முனிவர்களைப் பாதுகாக்க 5 சதவீதத்தில் ஜிஎஸ்டி கொண்டு வர வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

4. கடந்த 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து இன்றுவரை தமிழக அரசிடம் கோவையில் குறுந்தொழில் தொழில் கூடங்களை அமைத்துத் தரவேண்டும் என்று டாக்ட் சங்கம் கோரிக்கை முன்வைத்து வருகின்றது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை கோவையின் தொழில் துறையினர் கடந்த 8.4.2022ல் சந்தித்த பொழுது கோவையில் அரசு சார்பில் குறுந்தொழில் பேட்டைகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அந்த கோரிக்கை நிறைவேற்றத் தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆயிரக்கணக்கில் வாடகை கட்டடத்தில் இயங்கும் குறுந் தொழில் முனைவோர்களுக்குச் சொந்த இடத்தில் செயல்பட வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இந்தக் கூட்டம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

5. தொழில் நெருக்கடியில் உள்ள தொழில் முனைவோர்களைப் பாதுகாக்கத் தமிழக அரசு குறைந்த வட்டியில் தாய்கோ வங்கி மூலம் நிபந்தனையற்ற கடனாக 5 லட்சம் வரை கால அவகாசத்துடன் திருப்பி செலுத்த வாய்ப்பளித்து வழங்கிட வேண்டுமென்று இந்த கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

6. இந்திய அரசு இந்திய நாட்டின் குறு சிறு நடுத்தர தொழில்களை பாதுகாக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்று இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று உள்ள காலகட்டத்தில் துவங்கி எவ்வித முகாந்திரமும் இல்லாமல் மூலப்பொருள் விலை ஏற்றம் நடப்பாண்டில் 200 சதவிகிதத்துக்கும் மேல் மூலப்பொருள் உற்பத்தி செய்கின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய கார்ப்பரேட் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன மத்திய அரசிடம் தொழில்முனைவோர்கள் தொடர்ந்து மூலப்பொருள் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மானிட்டர் கமிட்டி அமைக்கக்கோரி தொழில்முனைவோர்கள் கோரிக்கை முன்வைத்து வருகிறோம்.

இந்திய நாட்டின் தொழில்களை பாதுகாக்க அரசு தொழில் முனைவோர்களின் கோரிக்கையை ஏற்று நாட்டில் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசை இந்த கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

இதில் மாவட்ட துணைத் தலைவர் S.சக்திவேல் நன்றி கூறினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...