தமிழக கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் - தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கம் கோரிக்கை..!

இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 47 முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



கோவை‌: தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.



தமிழ்நாடு முதுநிலை திருக்கோவில் பணியாளர்கள் சங்கத்தின் 12 மாநில பொதுக்குழுக் கூட்டம் வடவள்ளியில்நடைபெற்றது. இதில் பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாச்சலம் அடிகளார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் மதுரை மினாட்சியம்மன் கோவில், ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம், திருத்தணி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள47 முதுநிலை திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பணியாளர்களின் முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறிப்பாக தமிழகம் முழுவதும் கோவில்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், அறங்காவலர்கள் நியமனம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும், திருக்கோவில் பணியாளர்களுக்கு பணியிடை மாறுதல் குறித்து அறங்காவலர்கள் தன்னிச்சையாக செயல்படும் சட்டத்திருத்தத்தைத் திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதை அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அரசு தனி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கும் என்று திருக்கோவில் பணியாளர்கள் சங்கம்நம்புகின்றது என சங்க தலைவர் தெரிவித்தார்.

மேலும் முதுநிலை திருக்கோயில்களில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். தற்போது 40% காலிப்பணியிடங்கள்உள்ளது. இதனால் பணிச்சுமை காரணமாக பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் வேலை செய்து வருகின்றனர்.

உடனடியாக காலி பணியிடங்களை நிரப்பினால் தான் நீதிமன்றம் மற்றும் தமிழக அரசு அறிவிக்கின்ற திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியும், தற்பொழுது முக்கிய கோவில்களில் இலவச பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் துவக்கி வைத்துள்ளார்.



ஆனால் பல கோவில்களில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் பணி சுமை அதிகமான சூழல்களில் பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதனால் பணியாளர்கள் சிலர் மன அழுத்தம் அதிகரித்து இறந்தும் உள்ளனர் என நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...