கோவையில் அதிக வரி வசூல் இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ் வழங்கல்..!

2021-2022 நிதியாண்டிற்கான முனிசிபல்‌ பிரிமியர்‌ லீக்‌ போட்டிகளின்‌ நிறைவுவிழாவில்‌ அதிக வசூல்‌ இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ வழங்கினார்‌.



கோவை: வரிவசூல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு நடத்தப்பட்ட  2021-2022 நிதியாண்டிற்கான முனிசிபல்‌ பிரிமியர்‌ லீக்‌ (Municipal Premier League) போட்டிகளின்‌ நிறைவுவிழாவில்‌ அதிக வசூல்‌ இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ வழங்கினார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி, ஆர்‌.எஸ்‌.புரம்‌ மாநகராட்சி கலையரங்கத்தில்‌ கோவை மாநகராட்சி மற்றும்‌ ஜனக்ரஹா அமைப்பினருடன்‌ இணைந்து வரிவசூலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்களுக்கிடையே வரிவசூல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு நடத்தப்பட்ட 2021-2022 நிதியாண்டிற்கான முனிசிபல்‌ பிரிமியர்‌ லீக்‌ (Municipal Premier League) போட்டிகளின்‌ நிறைவுவிழாவில்‌ அதிக வசூல்‌ இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கு பரிசுகள்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌‌ வழங்கினார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தலைமை வகித்தார்‌. துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, துணை ஆணையாளர்‌ மோ.ஷாமிளா ஆகியோர்‌ முன்னிலை வகித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ பரிசுகள்‌ மற்றும்‌ பாராட்டுச்‌ சான்றிதழ்களை வழங்கி மேயர்‌ அவர்கள்‌ பேசியதாவது:-

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியின்‌ 5 மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில்‌ சொத்துவரி, தொழில்வரி, வரியில்லா இனங்கள்‌ மற்றும்‌ குடிநீர் கட்டணம்‌ போன்றவைகளின்‌ கேட்பு தொகைகளை வசூல்‌ செய்ய இலக்கு நிர்ணயம்‌ செய்யப்பட்டு ஒவ்வொரு நிதியாண்டிலும்‌ அதற்கான பணிகள்‌ நடைபெறும்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஜனக்கிரஹா அமைப்புடன்‌ இணைந்து மாநகராட்சி வரிவகசூலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலா்களுக்கிடையே வரிவகுல்‌ பணிகளை மேம்படுத்தும்‌ பொருட்டு, முனிசிபல்‌ பிரிமீயர்‌ லீக்‌ போட்டிகள்‌ 2021 நவம்பம்‌ 1-ம்‌ தேதி முதல்‌ ஆரம்பிக்கப்பட்டது.

மேலும்‌, சொத்துவரி, தொழில்வரி, வரியில்லா இனங்கள்‌ மற்றும்‌ குடிநீர்‌ கட்டணம்‌ ஆகியவற்றில்‌ அதிக வசூல்‌ இலக்கை அடைந்த வரிவசூலர்களுக்கு கடந்த நவம்பர்‌ 2021 மாதம்‌ முதல்‌ பிப்ரவரி 2022 மாதம்‌ முடிய ஒவ்வொரு மாதமும்‌ சாதனையாளர்‌ விருதுகள்‌ மற்றும்‌ பரிசு கூப்பன்கள்‌ வழங்கப்பட்டது.

2021-2022-ம்‌ நிதியாண்டிற்கான முனிசிபல்‌ பிரீமியர்‌ லீக்‌ போட்டியின்‌ நிறைவு விழாவில்‌ சிறப்பான பங்களிப்பு வழங்கிய வரிவகூலர்கள்‌ மற்றும்‌ உதவி வருவாய்‌ அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்‌ வழங்கி கெளரவிக்கப்படுகிறது.



இப்போட்டிகள்‌ இந்த ஒரு துறையில்‌ மட்டும்‌ வழங்குவதுபோல்‌, இனிவரும்‌ காலங்களில்‌ மாநகராட்சியின்‌ அனைத்து துறைகளிலும்‌ போட்டிகள்‌ நடத்த திட்டமிட்டு அனைவரையும்‌ ஊக்கப்படுத்தி மாநகராட்சி பணிகள்‌ மிக சிறந்த முறையில்‌ விளங்க வேண்டும்‌ என்று ஆணையாளர்‌ அவர்களை கேட்டுக்கொண்டு, பரிசு பெற வந்துள்ள வரிவசூலர்கள்‌, வரிவசூல்‌ இனங்களில்‌ நிலுவையில்‌ உள்ள இனங்களில்‌ தனிக்கவனம்‌ செலுத்தி அவற்றையும்‌ விரைந்து வரிவசூல்‌ செய்திட வேண்டும்‌ என கேட்டுக்கொள்கிறேன்‌. பரிசு பெற்ற அனைவருக்கும்‌ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தெரிவித்தார்‌.

இந்நிகழ்ச்சியில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ அவர்கள்‌ பேசியதாவது:

இந்த முனிசிபல்‌ பிரிமியர்‌ லீக்‌ போட்டிகள்‌ நிகழ்ச்சி ஜனக்ரஹா அமைப்பினர்‌ ஏற்கனவே ஒடிசா மாநிலத்திலும்‌, பல்வேறு மாநிலங்களிலும்‌ சிறப்பாக நடத்தி அந்தந்த மாநகராட்சிகளின்‌ வருவாய்‌ இனங்களை பெருக்க வழிவகை செய்துள்ளனர்‌.

இதனை நமது கோவை மாநகராட்சியிலும்‌ செயல்டுத்திட திட்டமிடப்பட்டு, மாநகராட்சியின்‌ வருவாய்‌ இனங்களை பெருக்கி இலக்கினை எட்டியுள்ளது. கடந்த 2021-2022 நிதியாண்டில்‌ சொத்துவரி வசூலானது ரூ.12.9 கோடி இது கடந்த 2020-2021 நிதியாண்டை காட்டிலும்‌ 6.4 சதவீதம்‌ உயர்ந்துள்ளது.

தொழில்வரி, வரியில்லா இனங்கள்‌ மற்றும்‌ குடிநீர்‌ கட்டணம்‌ போன்றவை கடந்த நிதியாண்டை காட்டிலும்‌ 2021-2022 நிதியாண்டில்‌ கூடுதலாக வகுல்‌ செய்யப்பட்டுள்ளது.

இப்பணியில்‌ ஈடுபட்ட வரிவகலர்கள்‌, உதவி வருவாய்‌ அலுவலா்கள்‌, உதவி ஆணையார்கள்‌ உள்ளிட்ட அனைவருக்கும்‌ நன்றியினையும்‌, வாழ்த்துக்களையும்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்தார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ மேற்கு மண்டல தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, வரிவிதிப்பு மற்றும்‌ நிதிக்குழுத்தலைவர்‌ வி.பி.முபசீரா, கல்விக்‌ குழுத்தலைவர்‌ மாலதி நாகராஜ்‌, மாமன்ற உறுப்பினர்‌

அழகுஜெயபாலன்‌, உதவி ஆணையர்‌ (வருவாய்‌) செந்தில்குமாரத்தினம்‌, மண்டல உதவி ஆணையர்கள் சரவணன்‌, சங்கர்‌, மோகனசுந்தரி, மாரிச்செல்வி, உதவி வருவாய்‌ அலுவலர்கள்‌, வரி தண்டலர்கள்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ கலந்து கொண்டார்கள்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...