நெருக்கடியில் ஜவுளித்துறை.. நூல் விலை உயர்வு: திருப்பூரில் மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம்..!

திருப்பூரில் கடுமையான தொழில் பாதிப்பு இருப்பதால் கடனை கட்ட முடியாதவர்களிடம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக பணம் வசூலிக்க கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூரில் நூல் விலை உயர்வை கண்டித்து மக்கள் ஜனநாயக முன்னேற்ற கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நூல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சுந்தரம் தலைமை தாங்கினார்.

நிறுவனத் தலைவர் இப்ராஹிம் பாதுசா எழுச்சியுரையாற்றினார். இதில் நூல் விலை உயர்வைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி மத்திய அரசுக்கு எதிராகக் கண்டன கோஷம் எழுப்பப் பட்டது.



மேலும், திருப்பூரில் கடுமையான தொழில் பாதிப்பு இருப்பதால் கடனை கட்ட முடியாதவர்களிடம் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் வலுக்கட்டாயமாகப் பணம் வசூலிக்கக் கூடாது என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக பொதுச்செயலாளர் வேல்முருகன், தலைமை ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், இணை ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், கழக அமைப்பாளர் மணிமாறன், துணை அமைப்பாளர் சீனிவாசன், துணைத்தலைவர் நாகேந்திரன், ஆலோசகர் அபுதாகிர், மேற்கு மண்டலச் செயலாளர் பிரகாஷ், இளைஞரணி தலைவர் முகமது பாரூக், செயலாளர் ராஜ்குமார் உள்படத் திருப்பூர் மாவட்ட மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...