கடந்த இரண்டு மாதங்களாக தனிப்படை அமைத்து தேடி வந்தநிலையில், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தோட்ட உரிமையாளரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை: கோவை தடாகம் அருகே மின் வேலியில் சிக்கி காட்டுயானை உயிரிழந்த விவகாரத்தில், தோட்ட உரிமையாளர் மனோகர் என்பவரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோவை தடாகம் அருகே வனப்பகுதியிலிருந்து, கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி வெளியேறிய காட்டுயானைகள் அருகே உள்ள தனியார் தோட்டத்திற்கு வந்துள்ளது. அப்போது அங்கு பொருத்தப்பட்டுள்ள மின் வேலியில் சிக்கி சுமார் 12 வயது மதிக்கத்தக்க ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற வனத்துறையினர் ஆய்வு செய்தபோது, யானை மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது உறுதி செய்தனர். இதையடுத்து மின்துறை ஊழியர்கள் அங்கு வந்து சோதனை செய்தனர்.
அப்போது உயர் மின் அழுத்த மின்சாரம் செலுத்தியதே யானை உயிரிழப்புக்குக் காரணம் என கண்டறியப்பட்டது. இதையடுத்து, வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தோட்ட உரிமையாளர் மனோகரன் மற்றும் அவரது மகன் நரேஷ் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆனால் மனோகரன் தொடர்ந்து தலைமறைவாக இருந்ததால் கடந்த இரண்டு மாதங்களாக வனத்துறையினர் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர். இதனிடையே மனோகரன் தனது வழக்கறிஞர் மூலம் கோவை நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் முன் ஜாமின் கேட்டு மனு அளித்தார்.
ஆனால் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் கர்நாடகாவில் பதுங்கி இருந்த மனோகரன் இன்று காலை பேருந்து மூலம் கோவை வந்தார். அப்போது பன்னிமடை பேருந்து நிறுத்தம் அருகே வந்த அவரை கோவை வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மகன் நரேஷை தேடி வருகின்றனர்.