தமிழகத்தில் முதல் முறையாக கோவை விமான நிலையத்தில் சுற்றுலா தலங்கள், பாரம்பரிய கலைகளின் புகைப்பட தொகுப்பு திறப்பு..!

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், இன்று காலை கோவை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு புறப்பாடு முனையத்தில், காட்சிப்படுத்தப்பட்டுள்ள பாரம்பரிய நடனங்கள், சுற்றுலாத் தலங்களின் புகைப்படங்களை திறந்து வைத்தார்.



கோவை: கோவை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு புறப்பாடு முனையத்தில் பாரம்பரிய நடனங்கள், சுற்றுலாத் தலங்களின் ஓவியம் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனை, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் இன்றுதிறந்து வைத்து பார்வையிட்டார்.



தமிழகத்தின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், புலியாட்டம், பொம்மலாட்டம், மயிலாட்டம், புரவி, தெருக்கூத்து, காவடி ஆட்டம் போன்ற நடனங்களின்ஓவியங்களும், கோவை மாவட்டத்தின் அருகே உள்ளமலைப்பிரதேசங்கள், அணைக்கட்டுகள், பண்டைய கால கோவில்கள், சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.



இந்நிகழ்வில், செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறுகையில்: கோவை விமான நிலையத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மலைப்பிரதேசங்கள், பாரம்பரியக் கோவில்கள் ஆகியவற்றின் புகைப்படங்களின் தொகுப்பு திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஆழியாறு, மேகமலை, வால்பாறை, மருதமலை ஆகிய சுற்றுலா தளங்களின் புகைப்படங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.



விமான நிலையத்திற்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த புகைப்பட காட்சி தொகுப்பானது, தமிழகத்தில், கோவை விமான நிலையத்தில் தான் முதல் முறையாகஅமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கோவையை அடுத்து, சென்னை, சேலம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய விமான நிலையங்களில், கூடிய விரைவில் அந்தந்த இடத்தின் சிறப்பம்சங்களை, வெளியூர் பயணிகள் அறிந்துகொள்ளும்படி அமைக்கப்படும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சுற்றுலா முடங்கிக் கிடந்த நிலையில், தற்போது பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கோவை வாலாங்குளத்தில் விரைவில் படகு சவாரியும் தொடங்கப்படும். அதேபோல, சிங்காநல்லூர் குளத்திலும் படகு சவாரி செய்வது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

சுற்றுலாத் துறையை பொருத்தவரை சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், என்று அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்த், துணை மேயர் வெற்றி செல்வன் ஆகியோர் கலந்துகொண்டனர்.



கோவை விமான நிலையத்தில் அமைக்கப்டிருக்கும் இந்தபுகைப்படங்களின் தொகுப்பு அங்கு வந்த பயணிகளை வெகுவாக கவர்ந்தது.





Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...